உள்ளூர்வாசிகளை (Local) வேலைக்கு எடுத்தால் ஊக்கத் தொகை! கலக்கும் தெலங்கானா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிக சமீபத்தில் ஒன்றாக இருந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம்.

 

ஆந்திரப் பிரதேசம் என்று இருந்த மாநிலம், தற்போது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி ஆந்திரப் பிரதேசம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது, ஹைதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விட்டது. இப்போது தெலுங்கானா மக்களின் வாழ்கையை வளமாக்கவும், ஹைதராபாத் நகரத்தின் கட்டமைப்பு மீது இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கவும், தெலுங்கானா சில திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

கேபினெட் கூட்டம்

கேபினெட் கூட்டம்

கடந்த 05 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை அன்று, சுமார் 8.30 மணி நேரம் தெலங்கானா கேபினெட், இந்த ஊக்கத் தொகைகளைக் குறித்து விவாதித்து இருக்கிறார்களாம். அதோடு மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொடுக்கும் ஊக்கத் தொகைகளைக் குறித்தும் விவாடித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வேலை வாய்ப்புகள் சலுகை 1

வேலை வாய்ப்புகள் சலுகை 1

தெலங்கானா மாநில அரசு, ஒரு நிறுவனம், தங்களின் திறன் தேவை இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கையில் (unskilled workforce)-ல் 70 சதவிகிதத்துக்கு மேல் உள்ளூரில் இருந்து ஊழியர்களை வேலைக்கு எடுத்தால், அவர்களுக்கு தனியாக ஊக்கத் தொகைகளை வழங்கப் போகிறார்களாம். அதே போல நிறுவனங்கள், தங்களின் திறன் தேவைப்படும் (Skilled Labour) மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில், 50 சதவிகிதம் உள்ளூர் மக்களை எடுத்தாலும் தனியாக ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.

சலுகை 2 வேலை வாய்ப்புகள்
 

சலுகை 2 வேலை வாய்ப்புகள்

அதே போல திறன் தேவை இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கையில் (unskilled workforce)-ல் 80 சதவிகிதத்துக்கு மேல் உள்ளூரில் இருந்து ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறார்களோ, அவர்களுக்கு தனி ஊக்கத் தொகைகளை வழங்குவார்களாம். அதே போல நிறுவனங்கள், தங்களின் திறன் தேவைப்படும் (Skilled Labour) மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில், 60 சதவிகிதம் உள்ளூர் மக்களை எடுத்தாலும் தனியாக ஊக்கத் தொகை வழங்கப் போகிறார்களாம்.

ஊக்கத் தொகை & சலுகைகள்

ஊக்கத் தொகை & சலுகைகள்

தெலங்கானா அரசின் கொள்கைகள் வழியாக பல்வேறு சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில், சரக்கு மற்றும் சேவை வரியில் சில சலுகைகள், ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவதில் மானியம், மின்சார கட்டணம் போன்றவைகள் வழியாகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்க இருக்கிறார்களாம்.

GRID பாலிசி

GRID பாலிசி

தெலங்கானா மாநிலத்தின் ஐடி துறையின் ஏற்றுமதி வியாபாரம் 1.2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இந்த வியாபாரத்துக்கு ஹைதராபாத் நகரத்தின் மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் அமைந்து இருக்கும் நிறுவனங்கள் அதிகம் பங்களிக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஐடி கம்பெனிகளூம் மாதாபூர் & கச்சிபோலி ஏரியாவிலேயே அமைந்து இருக்கின்றனவாம்.

கட்டமைப்பு சவால்

கட்டமைப்பு சவால்

இப்படி பெரும்பாலான கம்பெனிகள், ஒரே பகுதியில் அமைந்து இருப்பதால், சாலை போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறதாம். இதை மாற்ற GRID பாலிசியைக் கொண்டு வந்திருக்கிறது தெலங்கானா. இந்த கொள்கைப்படி, பரவலாக, ஹைதராபாத்தின் மற்ற பகுதிகளில் ஐடி கம்பெனிகளை நிறுவினால் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telangana announced incentives for companies that hire locals

The telangana government had announced new additional incentives for the companies who hire major portion of skilled and unskilled labor from locals.
Story first published: Saturday, August 8, 2020, 13:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X