எங்களுக்கு அனில் அம்பானியின் ஆர்காம் வேண்டாம்.. ஏர்டெல் நிராகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொலைத் தொடர்பு துறைகள் நஷ்டத்தில் இருந்து வந்தாலும், எப்படியேனும் அதிலிருந்து மீண்டு விட மாட்டோமா? அதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற நிலையில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏலத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

நஷ்டத்தில் உள்ள ஆர்காம் நிறுவனத்தை வாங்கினால் இன்னும் தங்களது சேவையினை மேம்படுத்த முடியும் என்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்க முனைந்தன.

இந்த நிலையில் தனது தம்பியின் நிறுவனத்தை வாங்க ஒரு புறம் அண்ணன் ஆரம்பத்தில் விண்ணபிக்காத நிலையில், ஆர்காம் ஏலத்திற்கான விண்ணபிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் இன்னும் விண்ணபிக்க கால அவகாசத்தை நீட்டிக்க கேட்டது.

ஆர்காம் நியாமற்ற முறையில் செயல்படுகிறது

ஆர்காம் நியாமற்ற முறையில் செயல்படுகிறது

நஷ்டத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக பல தொலைத் தொடர்பு சாதனங்கள் இருப்பதே இந்த போட்டிக்கு காரணம். நஷ்டத்தில் இயங்கிவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அதன் சொத்துகளை ஏலத்தில் விற்க முடிவு செய்தது. எனினும் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஆர்காம் நிறுவனம் நியாமற்று செயல்படுவதாக ஏர்டெல் கூறியுள்ளது. அதோடு அதன் சொத்துகளை வாங்க விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்களையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

நாங்கள் அவகாசம் கேட்டும் கொடுக்கவில்லை

நாங்கள் அவகாசம் கேட்டும் கொடுக்கவில்லை

இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குனர் ஹர்ஜீத் கோலி கூறுகையில், ஏர்டெல் நிறுவனம் நாங்கள் ஏலம் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசத்தினை நீட்டிக்க கோரியிருந்தோம். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வேறு நிறுவனம் கேட்டவுடன் தற்போது அவகாசத்தை நீட்டித்துள்ளது. இது நியாமற்ற செயல் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது

ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது

பார்தி ஏர்டெல் மற்றும் பாரதி இன்ஃபிராடெல் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் முறையே, ஆர்காம் நிறுவனத்தின் அலைகற்றை மற்றும் மொபைல் டவர்களையும் அலைகற்றையும் வாங்க முன்னரே விண்ணபித்திருந்தனர். இந்த நிலையில் நவம்பர் 11 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் ஜியோ 10 நாட்கள் கால அவகாசம் கேட்டது. இதெ ஏர்டெல் நிறுவனம் இந்த கால அவகாசத்தை டிசம்பர் 1 முதல் கால அவகாசம் கேட்ட நிலையில் அவசர அவசரமாக அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்டதாக ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம்

போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம்

மேலும் இது நியாமற்ற செயல்முறை, சமத்துவமற்றது. இது மிகவும் கேள்விக்குறியது. ஏலம் மிகப் வெளிப்படையான செயலாக இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இது நியாத்திற்கு எதிரானது. இதற்கு முன்பாக அனில் அம்பானி கடனில் தத்தளித்த போது இந்த நிறுவனத்தை பல்வேறு நிறுவனங்களிடம் விற்க முயன்றது. ஆனால் அப்போது யாரும் முன்வரவில்லை. ஆனால் தற்போது போட்டி போட்டுக் கொண்டு விண்ணபிக்க கால அவகாசம் கேட்கிறார்கள்.

தொடரும் பிரச்சனை

தொடரும் பிரச்சனை

ஒரு காலத்தில் தம்பி அண்ணனிடம் கேட்டபோது, ஆர்கானிம் கடனை ஏற்க முடியாத நிலையில், இதே அண்ணன் முகேஷ் அம்பானி நிராகரித்த நிலையில், தற்போது அதை மீண்டும் வாங்க முன் வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஆர்காமின் கடனாளர் எரிக்ஸன் நிறுவனம் ஆரம்பித்த இந்த இந்த பிரச்சனை இன்று ஏலத்தில் வந்து முடிந்திருக்கிறது.

அனில் அம்பானி ராஜினாமா

அனில் அம்பானி ராஜினாமா

இந்த சட்ட ரீதியாக நிலுவைத் தொகை தொடர்பாக உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் பின்னர், கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் இந்த நிறுவனம் 30,142 கோடி ரூபாய் இழப்புக்குள்ளாகியது. இந்த நிலையிலேயே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தனது ராஜினாமாவை கடந்த வாரத்தில் வழங்கினார்.

சொத்துகள் விற்பனை

சொத்துகள் விற்பனை

இந்த நிலையில் ஆர்காம் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட கடன் சுமர் 33,000 கோடி ரூபாய் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதே கடந்த ஆகஸ்ட மாதத்தில் 49,000 கோடி ரூபாய்க்கு கடனுக்கான கோரிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த நிலையில் தான் ஆர்காம் தனது அனைத்து சொத்துகளையும் விற்பனைக்கு வைத்துள்ளது.

விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுதல்

விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுதல்

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ கால அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நவம்பர் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலேயே ஏர்டெல் தாங்கள் விண்ணப்பித்து இருந்த விண்ணப்பத்தினை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இதன் சொத்து மதிப்பானது ஸ்பெக்ட்ரம் ஹோல்டிங் 122 மெகா ஹெர்ட்ஸ், திவாலா நடவடிக்கைகளுக்கு முன் நிறுவனம் சுமார் 14,000 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. இதே அதன் டவர் மதிப்பு 7,000 கோடி ரூபாய் என்றும், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தரவு மையங்கள் ஆகியவை அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecom operator Airtel withdraws bid for reliance communication assets

Telecom operator Airtel withdraws bid for reliance communication assets. Airtel said Disappointingly, our request for extension was rejected by CoC, but now they extended time November 25 for jio. It’s very disappointed for me. So we withdraw that application, Kohli said.
Story first published: Monday, November 18, 2019, 13:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X