உலகின் முன்னணி எலக்டிரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா கார்களுக்கு அமெரிக்காவுக்கு அடுத்தாக சீனாவில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் சீன தொழிற்சாலைகளில் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க்.

இந்த நிலையில் டெஸ்லா கார்களுக்கு ஏற்கனவே ராணுவ வளாகம், குடியிருப்பு, அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் நுழைய சீன அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது, ஜூலை 1ஆம் தேதி துவங்க உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் சுமார் 2 மாதங்களுக்கு நடக்க உள்ளது.
இக்கூட்டம் முடியும் வரையில் அரசு தலைவர்கள் கூடும் சீன கடலோர மாவட்டம் பெய்டெய்ஹே-க்குள் டெஸ்லா கார்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே எலான் மஸ்க் டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறது என்ற சந்தேகம் சீன அரசுக்கு எழுந்த போது விளக்கம் அளித்த போதும் மீண்டும் டெஸ்லா கார்களுக்கு தடை விதித்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.