ரகசிய உறவில் பிறந்த இரட்டை குழந்தைகள்... எலான் மஸ்க்கிற்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

உலக பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அவர்கள் கடந்த சில நாட்களாகவே தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எலான் மஸ்க் அவர்களுக்கு கடந்த ஆண்டு அவரது அலுவலகத்தில் பணி செய்யும் பெண் ஒருவரால் இரட்டை குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை.. அடுத்த 1 வருடத்தில் ரொம்ப மோசமாகலாம்.. இந்தியா என்னவாகுமோ?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

51 வயதான அவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது 36 வயது பெண் அதிகாரி ஷிவோன் சிலிஸ் என்பவருடன் ரகசிய உறவு இருந்ததாகவும் இந்த உறவின் மூலம் அவருக்கு இரட்டை குழந்தைகள் கடந்த ஆண்டு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

இந்த இரட்டை குழந்தைகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறந்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் மற்றும் ஷிவோன் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது அதன் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷிவோன் சிலிஸ்
 

ஷிவோன் சிலிஸ்

எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் ஷிவோன் சிலிஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் வேலைக்கு சேர்ந்தார். டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய அவர் 2019ஆம் ஆண்டு நியூராலிங்கில் இணைந்தார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினால் ஷிவோன் சிலிஸ் தான் முன்னின்று நடத்துவார் என்றும் கூறப்பட்டது.

ரகசிய உறவு

ரகசிய உறவு

இந்த நிலையில் எலான் மஸ்க், ஷிவோன் சிலிஸ் ஆகிய இருவருக்கும் ரகசிய உறவு இருந்ததாகவும், இந்தரகசிய உறவின் காரணமாக தற்போது அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து எலான் மஸ்க் தற்போது மொத்தம் 9 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 9 குழந்தைகள்

மொத்தம் 9 குழந்தைகள்

கனடா நாட்டுப் பாடகர் கிரீம்ஸ் என்பவரை திருமணம் செய்த எலான் மஸ்க்கிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அதன்பின் கனடா எழுத்தாளரான முன்னாள் மனைவி ஜஸ்டின் வில்ஸனுடன் இணைந்து ஐந்து குழந்தைகளை எலான் மஸ்க் பெற்றார். இதனையடுத்து மொத்தம் ஏழு குழந்தைகள் தான் எலான் மஸ்க் அவர்களுக்கு இருந்தது என்ற நிலையில் தற்போது அவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஷிவோன் சிலிஸ் என்பவருடன் இணைந்து இரட்டை குழந்தைகளை பெற்றதால் அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை கட்டுப்பாடு

மக்கள் தொகை கட்டுப்பாடு

மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொள்கைக்கு எதிராக ஆரம்பம் முதல் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து வருகிறார். மக்கள் தொகை கட்டுப்பாடு காரணமாக உலகில் வயதானவர் எண்ணிக்கை அதிகரித்து, இளம் வயதினரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் மனிதர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டு பெரிய குடும்பமாக வாழ தொடங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வலியுறுத்தி வருவது மட்டுமின்றி தனது குடும்பத்திலேயே அதை நிறைவேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla CEO Elon Musk now father of 9, twins with executive Shivon Zilis!

Tesla CEO Elon Musk now father of 9, twins with executive Shivon Zilis! | ரகசிய உறவில் பிறந்த இரட்டை குழந்தைகள்... எலான் மஸ்க்கிற்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்?
Story first published: Thursday, July 7, 2022, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X