11 பில்லியன் டாலர் பேஅவுட்.. எலான் மஸ்க்-க்கு செம ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தகம் சரிந்திருந்த நிலையிலும் கணிப்புகளை விடவும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சுமார் 11 பில்லியன் டாலர் அளவிலான ஆப்ஷன் பேஅவுட் பெற தகுதி பெற்று உள்ளார்.

 

டெஸ்லா நிறுவனம் முதல் காலாண்டில் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் கார்களை டெலிவரி செய்தது மட்டும் அல்லாமல், சீனாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு வர்த்தகம் நிலையான வளர்ச்சி அடையும் அளவிற்குத் தளத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக வால் ஸ்ட்ரீட் கணிப்புகளைத் தாண்டி டெஸ்லா வருவாய் மற்றும் லாபம் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

 எலான் மஸ்க்-ன் டெஸ்லா

எலான் மஸ்க்-ன் டெஸ்லா

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் முதல் காலாண்டில் வரி மற்றும் இதர செலவுகளுக்கு முன்பு சுமார் 10.39 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் எலான் மஸ்க்-ன் 2018 சம்பள ஒப்பந்தத்தின் பசி 5வது மற்றும் 6வது ஆப்ஷன் பேஅவுட் பெற தகுதி பெற்றுள்ளார். மேலும் சம்பளத்திற்குப் பதிலாக டெஸ்லா பங்குகளைத் தள்ளுபடி விலையில் பெற உள்ளார்.

 சம்பளம் வேண்டாம்

சம்பளம் வேண்டாம்

எலான் மஸ்க் சம்பளத்திற்குப் பதிலாக இந்நிறுவனப் பங்குகளைப் பெறுவதன் மூலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்க முடியும். மேலும் டெஸ்லா மிகப்பெரிய வர்த்தக இலக்கை நிர்ணயம் செய்துள்ள நிலையில், இலக்கை அடைய இந்த நிதி பெரிய அளவில் உதவும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 டொயோட்டா, வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ்
 

டொயோட்டா, வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ்

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான டொயோட்டா, வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை விடவும் மிகவும் குறைவான கார்களை மட்டுமே டெஸ்லா தயாரித்து விற்பனை செய்திருந்தாலும் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலர், ஆனால் டொயோட்டா வெறும் 250 பில்லியன் டாலர் மட்டுமே.

 டெஸ்லா பங்குகள் 8 மடங்கு வளர்ச்சி

டெஸ்லா பங்குகள் 8 மடங்கு வளர்ச்சி

2021ஆம் ஆண்டில் தொடர்ந்து உச்சத்தை அடைந்து வரும் டெஸ்லா பங்குகள், 2020ல் மட்டும் சுமார் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சி மூலம் டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான லாபம் கிடைத்தது போல் எலான் மஸ்க்-ம் அதிக லாபத்தைப் பெற்றுள்ளார்.

 34 பில்லியன் டாலர் லாபம்

34 பில்லியன் டாலர் லாபம்

கடந்த 6 பகுதியையும் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து சம்பளத்தைப் பெறாமல் இலக்கை அடைந்து தள்ளுபடி விலையில் பங்குகளைக் கைப்பற்றி வருகிறார். இந்நிலையில் இந்தப் பங்குகள் மூலம் 2020 முதல் 2021 வரையில் சுமார் 34 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு பகுதி சம்பளம் 6 பில்லியன் டாலராக உள்ளது.

 டெஸ்லா பங்கு விலை

டெஸ்லா பங்கு விலை

பில்லியன்

 45 டாலர் முதல் 900 டாலர் வரை

45 டாலர் முதல் 900 டாலர் வரை

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு துவங்கிய காலமான நவம்பர் 2019ல் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கு விலை வெறும் 45 டாலர், ஆனால் இன்று 900 டாலர் என்ற உச்ச விலையை நிர்ணயம் செய்து 738 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla CEO Elon Musk Qualifies For $11 Billion Options Payout

Elon Musk latest updates.. Tesla CEO Elon Musk Qualifies For $11 Billion Options Payout
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X