ஜேபி மோர்கன் போட்ட வழக்கு.. கடுப்பான மஸ்க்.. 1 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கும் டெஸ்லா பேன்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன், 2018ல் டெஸ்லா நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக மாற்ற முதலீடு பெற்ற பின் ஜேபி மோர்கன் உடனான ஸ்டாக் வாரென்ட் தொடர்பான ஒப்பந்தத்தைச் செய்யப்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ஜேபி மோர்கன் வழக்கு தொடுத்துள்ளது.

 

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதைக் கண்டு கடுப்பான எலான் மஸ்க், ஜேபி மோர்கன் வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், yelp தளத்தில் ஒரு ஸ்டார் கொடுப்பேன் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தளத்திற்குப் போட்டி கொடுத்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் எலான் மஸ்க் இது ஜேபி மோர்கன்-க்கு கடைசி எச்சரிக்கை எனவும் கூறியுள்ளார்.

yelp தளம்

yelp தளம்

இதைக் கண்ட டெஸ்லா மற்றும் எலான் மஸ்க் ரசிகர்கள் yelp தளத்தில் தானாக முன்வந்து ஜேபி மோர்கன் நிறுவனத்திற்கு 1 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தது மட்டும் அல்லாமல் தாறுமாறாகக் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதில் குறிப்பாக டெஸ்லா-வையும், எலான் மஸ்க்-ஐயும் பகைத்துக்கொண்டால் இது தான் நடக்கும் என்ற தொனியில் ஏகப்பட்ட கமெண்ட் குவிந்துள்ளது.

ஜேபி மோர்கன்
 

ஜேபி மோர்கன்

இதைத் தொடர்ந்து yelp தளத்தில் ஜேபி மோர்கன் நிறுவனத்திற்குப் புதிய கமெண்ட் அல்லது ரிவியூவ் கொடுக்கும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 ஸ்டார் ரேட்டிங் கொடுப்போர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. அமெரிக்காவில் வாடிக்கையாளர் அனுபவம் குறித்த தரவுகளை அளிக்கவும், பெறவும் yelp தளம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

 எலான் மஸ்க் டிவிட்டர்

எலான் மஸ்க் டிவிட்டர்

மேலும் எலான் மஸ்க் தனது டிவிட்டரில் நேரடியாக ஜேபி மோர்கன் நிறுவனத்திற்கு 1 ஸ்டார் ரேட்டிங் கொடுக்க வேண்டும் எனக் கூறாவிட்டாலும், அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர். இந்நிலையில் ஜேபி மோர்கன்-க்கு ரேட்டிங் கொடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்திற்குத் தீப்பொறியுடன் ரிப்ளே செய்துள்ளார் எலான் மஸ்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla fans giving 1 star rating for JPMorgan on Yelp; After Elon musk final warning

Tesla fans giving 1 star rating for JPMorgan on Yelp; After Elon musk final warning ஜேபி மோர்கன் போட்ட வழக்கு.. கடுப்பான மஸ்க்.. 1 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கும் டெஸ்லா பேன்ஸ்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X