740 ஏக்கரில் புதிய தொழிற்சாலை.. வியக்கவைக்கும் டெஸ்லா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக ஆட்டோமொபைல் சந்தையை டெஸ்லாவிற்கு முன் டெஸ்லாவிற்குப் பின் எனப் பிரித்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். முழுமையாகப் பேட்டரியில் இயங்கும் கார், டிரைவர் இல்லாமல் இயங்கும் கார், அதிநவீன தொழில்நுட்பம், பல முன்னணி கார்களை விடவும் மிகவும் திறன் வாய்ந்த கார்கள் என டெஸ்லாவின் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவை அனைத்திற்கும் மேலாகச் சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கும் கார் என்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப கார்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 740 ஏக்கரில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா. எங்குத் தெரியுமா..?

ஆட்டோமொபைல் துறையின் சொர்கம்

ஆட்டோமொபைல் துறையின் சொர்கம்

உலகளவில் ஆட்டோமொபைல் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நாடு என்றால் அது ஜெர்மனி தான், சொல்லப்போனால் ஆட்டோமொபைல் துறையில் சொர்க்கமாகவே ஜெர்மனியை பார்க்கப்படுகிறது. பல அமெரிக்க நிறுவனங்கள் ஜெர்மனியில் இருந்தாலும் டெஸ்லா-வின் வருகை டெஸ்லாவிற்கு மட்டும் அல்லாமல் ஜெர்மனிக்கும் பெருமைப்படும் விஷயமாக உள்ளது.

ஜிகாபேக்டரி

ஜிகாபேக்டரி

ஜெர்மனி தலைநகரான பெர்லின்-க்கு வெளியில் இருக்கும் Gruenheide என்னும் இடத்தில் சுமார் 740 ஏக்கர் நிலத்தில் டெஸ்லா தனது புதிய ஜிகாபேக்டரியை அமைக்க அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதில் முதல்கட்டமாக இந்த 740 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான பணிகளை Brandenburg அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது டெஸ்லா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் படி 740 ஏக்கர் நிலத்திற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிகிறது.

 

திட்ட வடிவம்

திட்ட வடிவம்

மேலும் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை வேகமாக அமைத்து முடிக்க வேண்டும் என்பதற்காக நிலத்திற்கான ஒப்பந்தம் செய்து முடித்த கையோடும் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் பெறத் தொழிற்சாலையின் ப்ளூபிரின்ட் தயாரிக்கும் பணியில் டெஸ்லா இறங்கியுள்ளது.

மேலும் இந்தத் தொழிற்சாலை பெர்லின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது.

 

உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு

உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு

இப்புதிய தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்கு 5000 டெஸ்லா மாடல் Y கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

அமெரிக்காவில் இருக்கும் ஜிகாபேக்டரி மூலம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா சந்தையையும், சீனாவில் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஜிகாபேக்டரி மூலம் ஆசியச் சந்தையும், தற்போது அமைக்கப்பட உள்ள ஜெர்மனி தொழிற்சாலை மூலம் மொத்த ஐரோப்பிய சந்தைக்கும் கார்களைத் தயாரித்து, விநியோகம், விற்பனை செய்ய முடியும் என டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla nears land deal for gigafactory outside of Berlin: Report

Elon Musk-led automaker Tesla has reportedly neared deal and is working with state officials in Brandenburg on the contract to secure around 740 acres of land outside Berlin for its European gigafactory. Tesla has also reportedly filed the requisite documents with local environmental monitoring authorities. In November, Musk revealed that he had selected an area outside of Berlin for gigafactory.
Story first published: Monday, December 23, 2019, 9:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X