அமெரிக்காவை மாற்றிய டெஸ்லா.. 2020ல் வரலாற்று நிகழ்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ஆம் ஆண்டை யாரும் மறக்க முடியாத அளவிற்குக் கொரோனா தொற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் இருந்தது. ஆனால் 2020ல் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை டெஸ்லா செய்துள்ளது என்றால் மிகையில்லை.

ஆம், பொதுவாகப் புதுமையை வாடிக்கையாளர்கள் விரும்பினால் முதலீட்டாளர்கள் விரும்பமாட்டார்கள், முதலீட்டாளர்கள் விரும்பினால் வாடிக்கையாளர்கள் விரும்பமாட்டார்கள்.

ஆனால் டெஸ்லா நிறுவனத்தில் இரண்டு பக்கமும் வெற்றி தான் இதனால் அமெரிக்காவில் நடந்தது என்ன தெரியுமா..?

அலிபாபா மீது சீன அரசு அமைப்பு வழக்கு.. வசமாக மாட்டிக்கொண்டது..!அலிபாபா மீது சீன அரசு அமைப்பு வழக்கு.. வசமாக மாட்டிக்கொண்டது..!

டெஸ்லா மற்றும் வால் ஸ்ட்ரீட்

டெஸ்லா மற்றும் வால் ஸ்ட்ரீட்

2020ஆம் ஆண்டில் டெஸ்லா மற்றும் வால் ஸ்ட்ரீட் இணைந்து மொத்த அமெரிக்க ஆட்டோமொபைல் துறையையும் எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. டெஸ்லா பல வருடங்களுக்கு முன்பே வாடிக்கையாளர்கள் மனதை வென்ற நிலையில், 2020ல் முதலீட்டாளர்கள் கைப்பற்றி இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 600 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்குள் தள்ளியுள்ளது.

எலான் மஸ்க் சாதனை

எலான் மஸ்க் சாதனை

தோல்வி அடைந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைக் கையில் எடுத்துத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து இன்று உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.

612 பில்லியன் டாலர் மதிப்பு

612 பில்லியன் டாலர் மதிப்பு

இன்றைய நிலையில் உலகின் 5 முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மொத்த மதிப்பை விடவும் எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனம் அதிக மதிப்புடையது. இன்றைய சந்தை மதிப்பீட்டின் டெஸ்லா சுமார் 612 பில்லியன் டாலர் மதிப்புடையது.
இந்நிலையில் அமெரிக்காவின் S&P 500 குறியீட்டில் டெஸ்லா பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்களும் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

அமெரிக்கா ஆட்டொமொபைல் நிறுவனங்கள்

அமெரிக்கா ஆட்டொமொபைல் நிறுவனங்கள்

இந்நிலையில் 2021ல் அமெரிக்காவின் அனைத்து ஆட்டொமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. குறிப்பாகப் போர்டு மோட்டார் நிறுவனம் மாடல் டி-க்குச் சிறப்பு உற்பத்தி தளத்தை அமைத்து அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் வரலாற்றை ஏற்படுத்தியுள்ளது.

பருவகால மாற்றம்

பருவகால மாற்றம்

இதே 2020ல் hedge funds மற்றும் இதர பங்கு முதலீட்டாளர்கள் கார்பரேட் நிறுவனங்களிடம் பருவகால மாற்றம் குறித்து அதிகளவிலான அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் பருவகால மாற்றத்தைக் கட்டுப்படுத்த முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக மாற வேண்டிய கட்டாயத்தில் இறங்கியுள்ளது.

 

2030 முதல் பெட்ரோல், டீசல் கார்

2030 முதல் பெட்ரோல், டீசல் கார்

லண்டன் முதல் பெய்ஜிங், கலிபோர்னியா வரை பல முன்னணி வல்லரசு நாடுகள் பெட்ரோல், டீசல் கார் தயாரிப்புகளை 2030 முதல் தடை செய்ய ஆலோசனை வருகிறது. இதேவேளையில் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கார் தயாரிப்பை சுற்றித்தான் பல கோடி வேலைவாய்ப்புகள் உள்ளது.

இந்தப் பிரச்சனையில் இருந்து எப்படி வெளியேறுவது என்பதைத் தற்போதைய பிரச்சனை.

 

மென்பொருள் துறை

மென்பொருள் துறை

டெஸ்லா நிறுவனத்தின் வெற்றி மூலம் மென்பொருள் துறைக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆம் டெஸ்லா கார்களின் பல்வேறு மேம்பாடுகள் தொழில்நுட்ப வாயிலாகவும், ஸ்மார்ட்போன் வாயிலாகவும் பெற முடியும்.

இதேபோன்ற சேவையைத் தற்போது அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையான பிக்அப் டிரக்-ஆன போர்டு F-150 கார்களிலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களுக்காக டெஸ்லா அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla Success makes US Auto industry shift toward electrification: historic moment in 2020

Tesla Success makes US Auto industry shift toward electrification: a historic moment in 2020
Story first published: Thursday, December 24, 2020, 18:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X