பிளாஸ்டிக் தடையால் ஜாக்பாட்.. தொழிலதிபர்களாக மாறும் இளைஞர்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 

இந்த தடை காரணமாக பிளாஸ்டிக் தொழில் உற்பத்தி பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் காகித கப் மற்றும் காகித தட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதனையடுத்து காகித கப் தயாரிக்கும் சொந்த தொழிலை தொடங்க ஏராளமான இளைஞர்கள் முன்வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கூகுள் துவங்கும் புதிய ஸ்கூல்.. அட இது பயங்கரமா இருக்கே..!

பிளாஸ்டிக் தடை

பிளாஸ்டிக் தடை

ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை காரணமாக பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் கப்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காகிதப்பொருட்கள்

காகிதப்பொருட்கள்

பிளாஸ்டிக் பொருட்கள் தடை காரணமாக காகித தட்டு, கப் தயாரிக்கும் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை அடுத்து வேலை இல்லாத இளைஞர்கள் தற்போது காகிதத்தால் ஆன பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி வருகின்றனர்.

சரியான தேர்வு
 

சரியான தேர்வு

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழில் புதிதாக வேலை தேடுவோர் மற்றும் புதிதாக தொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்களுக்கான மிகச் சரியான தேர்வு என்று கூறப்பட்டு வருகிறது.

சிறிய இடம் போதும்

சிறிய இடம் போதும்

பேப்பர் கப் தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கு அதிக இடம் மற்றும் முதலீடு தேவையில்லை என்பது மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்தின் அளவு 2 அடி முதல் 5 அடி வரை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய அறையில் கூட இந்த இயந்திரத்தை வைத்து விடலாம்.

இரண்டு இயந்திரங்கள்

இரண்டு இயந்திரங்கள்

இந்த வணிகத்திற்கு உங்களுக்கு 2 இயந்திரங்கள் தேவை. ஒரு தானியங்கி காகிதத் தட்டு தயாரிக்கும் இயந்திரம், மற்றொன்று வெவ்வேறு அளவுகளில் கப்கள் மற்றும் தட்டுகளின் வடிவங்களை உருவாக்க ஒரு இயந்திரம். ஒரு சிறிய இயந்திரத்தின் விலை ரூ.80,000 முதல் தொடங்குகிறது. ஒரு நாளில், 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேப்பர் கப், தட்டுகள் தயாரிக்கலாம்.

வருமானம் எவ்வளவு?

வருமானம் எவ்வளவு?

இந்த இயந்திரங்களின் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேப்பர் கப்கள் மற்றும் தட்டுகள் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை சரியான அளவில் விற்பனை செய்தால் மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், வேலையில்லாத மற்றும் சொந்த தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு உதவி

மத்திய அரசு உதவி

மேலும் இந்த தொழிலை செய்வதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசால் நடத்தப்படும் முத்ரா திட்டத்தில் இயந்திரத்தின் மதிப்பீட்டில் 25% மட்டும் நாம் முதலீடு செய்தால் போதும். மத்திய அரசு உங்களுக்கு 75% கடன் தருகிறது. இதனை மிக குறைந்த வட்டியில் மாதமாதம் சின்னச்சின்ன தவணைகளாக செலுத்திக் கொள்ளலாம். எனவே இந்த தொழில் செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் மொத்த முதலீடு தேவை என்றால் 25 ஆயிரம் ரூபாய் மட்டும் நம் கையில் இருந்தால் உடனடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

மாதம் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கிடைக்கும் இந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் கிடைப்பது மட்டுமின்றி சமூகத்தில் சொந்த தொழில் செய்யும் தொழிலதிபர் என்ற பெருமையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்

மாற்றம்

பிளாஸ்டிக் தடை காரணமாக பிளாஸ்டிக் தொழிலில் உள்ளவர்கள் தற்போது காகித கப் மற்றும் தட்டுகள் தயாரிக்கும் தொழிலுக்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The advantage of plastic ban, Youth earns big money

The advantage of plastic ban, Youth earns big money | பிளாஸ்டிக் தடையால் தொழிலதிபர்களாக மாறும் இளைஞர்கள்: ஒரு ஆச்சரிய தகவல்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X