5 வருடத்தில் 25 விமான நிலையம் தனியார்மயம்.. திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு, அரசுக்குப் பெரிய அளவில் லாபம் அளிக்காத மற்றும் பெரிய அளவில் பயன்படுத்த முடியாத சொத்துக்களைத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் வாயிலாகத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டு அதற்காக முழு அறிக்கையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இதில் முக்கியமாக இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலைய0த்தை அடுத்த 5 வருடத்திற்குள் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது எந்தெந்த விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விக்குப் பதில் லோக்சபாவில் அளிக்கப்பட்டு உள்ளது.

 2 டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..? 2 டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..?

 தேசிய பணமாக்கல் திட்டம்

தேசிய பணமாக்கல் திட்டம்

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்குத் துவக்கத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய நிதியமைச்சர் அரசின் அனைத்து சொத்துக்களையும் நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு மட்டுமே விடப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்ப்புகள் குறைந்தது.

 விகே சிங்

விகே சிங்

இந்நிலையில் லோக்சபாவில் எழுந்த கேள்விக்குச் சிவில் ஏவியேஷன் அமைச்சகத்தின் மாநில அமைச்சர் விகே சிங் பதில் அளித்துள்ளார். தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் தனியார்மயமாக்கப்படும் 25 விமான நிலையத்தை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தேர்வு செய்துள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட விமான நிலையங்களைப் பல பகுதிகளாகப் பிரித்து 2022 முதல் 2025 வரையில் தனியார்மயமாக்கப்படுகிறது.

 25 விமான நிலையங்கள்

25 விமான நிலையங்கள்

இதன் படி புவனேஷ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், திருச்சி, இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், நாக்பூர், பாட்னா, மதுரை, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், சென்னை, விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி ஆகிய விமான நிலையம் தனியார்மயமாக்கப்படுகிறது.

 4 லட்சம் பயணிகள்

4 லட்சம் பயணிகள்

தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விமான நிலையத்தில் 2019 மற்றும் 2020 நிதியாண்டின் படி வருடத்திற்குக் குறைந்தபட்சம் 4 லட்சம் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆய்வு செய்து கணித்துள்ளது.

 திருச்சி சர்வதேச விமான நிலையம்

திருச்சி சர்வதேச விமான நிலையம்

மேலும் தமிழ்நாட்டின் திருச்சியில் உருவாக்கப்படும் சர்வதேச விமான நிலையத்தையும் சேர்ந்து சுமார் 13 விமான நிலையங்கள் PPP முறையில் கட்டப்பட உள்ளது. PPP முறையில் கட்டப்படும் விமான நிலைய கட்டுப்பாடுகளைப் பல மடங்க தளர்த்து இருந்தாலும், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பிடம் தான் தனது உரிமை உள்ளது.

 136 விமான நிலையங்கள்

136 விமான நிலையங்கள்

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறையின் கீழ் 136 விமான நிலையங்கள் உள்ளது, இதில் 7 விமான நிலையங்களை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா கூட்டணி முறையில் கட்டியுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்- மும்பை, ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் - ஹைதராபாத், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் - பெங்களூரு, கண்ணூர் சர்வதேச விமான நிலையம்- கண்ணூர், சண்டிகர் விமான நிலையம் - சண்டிகர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The complete list of 25 airports to be privatised in next 5 years under National Monetization Pipeline

The complete list of 25 airports to be privatised in next 5 years under National Monetization Pipeline 5 வருடத்தில் 25 விமான நிலையம் தனியார்மயம்.. திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை விமான நிலையமும் அடக்கம்..!
Story first published: Friday, December 10, 2021, 19:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X