இரவு 12மணி முதல் விலை உயரந்த பொருட்கள்.. சூதானமா இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்களுக்கான வருமான வரிச் சலுகை, வரிப் பலகையில் தளர்வுகள் எனப் பலவற்றை எதிர்பார்த்த நிலையில் சாமானிய மக்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தாலும், பங்குச்சந்தையும், வர்த்தகச் சந்தையும் கூடுதல் மற்றும் புதிய வரி விதிக்காத காரணத்தால் மகிழ்ச்சியில் உள்ளது. இதன் வெளிப்பாடு தான் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம்.

 

பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் முன் வருமான வரி, 80சி பிரிவு, standard deduction ஆகியவற்றின் கீழ் அதிகளவிலான சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதற்கு மாறாக உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரியை பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

சாமானிய மக்கள் ஏமாற்றம்

சாமானிய மக்கள் ஏமாற்றம்

2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பின் மூலம் சாமானிய மக்கள் அதிகளவிலான வேலைவாய்ப்பை இழந்து, பெருமளவிலான வருமானத்தை இழந்து தவித்த நிலையில் வருமான வரியில் சலுகையை ஏன் அளிக்கவில்லை எனப் பட்ஜெட் குழு உடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுந்தது.

நிர்மலா சீதாராமன் பதில்

நிர்மலா சீதாராமன் பதில்

இதற்குப் பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் வருமானம் ஆகியவை கூடிய விரைவில் முன்னேற்றம் அடையும் எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி
 

வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி

இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரையை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் விலை உயர உள்ளது.

பிப்ரவரி 2 முதல்

பிப்ரவரி 2 முதல்

இப்படி பட்ஜெட்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட பின் 12 மணி முதல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்தது. இதன் பட்டியல் இதோ, உங்களுக்காக..

 • பிரிட்ஜ் மற்றும் ஏசி-களின் கம்ப்ரசர்
 • LED விளக்குகள், உதிரிப்பாகங்கள், பிரிண்டெட் சர்கியூட் போர்டு
 • பட்டு மற்றும் பருத்தி
 • சோலார் இன்வெர்டார்ஸ் மற்றும் சோலார் விளக்குகள்
 • ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள், பாதுகாப்பு மற்றும் கடினமான கண்ணாடிகள்
 • வின்ஸ்கிரீன் வைப்பர்ஸ்
 • சிக்னல் கருவிகள்
 • மொபைல் போன் உதிரிபாகங்களாண PCBA
 • கேமரா மாடியூல்
 • கனெக்டார்ஸ்
 • பே கவர், சைட் கீஸ், மொபைல் போன் சார்ஜர் உதிரிபாகங்கள்
 • லித்தியம் அயான் பேட்டரியின் மூலப் பொருட்கள் மற்றும் தயாரிப்புப் பொருட்கள்
 • இங் கார்டிஜெஸ் மற்றும் இங்க் ஸ்பேரே நாசில்
 • முழுமையாகத் தயாரிக்கப்பட்ட தோல் பொருட்கள்
 • நைலான் பைபர் மற்றும் யார்ன் (Yarn)
 • பிளாஸ்டிக் பில்டர் பொருட்கள்
 • சிந்தடிக் கற்கள் மற்றும் கியூபிக் zirconia
விலை குறையும் பொருட்கள்

விலை குறையும் பொருட்கள்

 • தங்கம் மற்றும் தங்க தாது
 • வெள்ளி மற்றும் வெள்ளி தாது
 • பிளாட்டினம் மற்றும் பல்லேடியம்
 • வெளிநாட்டு அமைப்புகள் இறக்குமதி செய்யும் மருத்து உபகரணங்கள்

இவரின் மீதான சுங்க வரி குறையும் காரணத்தால் இதன் விலை பிப்ரவரி 2ஆம் தேதி முதல் குறைய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The imported items that will get more expensive starting today

The imported items that will get more expensive starting today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X