ஸ்விஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் காலணிகளை விற்பனை செய்து வரும் பாட்டா நிறுவனத்தில் முதல் முறையாக ஒரு இந்தியர் தலைவராகியுள்ளார். இந்நிறுவனத்தின் 126 வருட வரலாற்றில் பல தலைவர்களை நியமிக்கப்பட்டு வர்த்தக ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்ட நிலையில் தற்போது 49 வயதான சந்தீப் கட்டாரியா குளோபல் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாட்டா நிறுவனத்தின் குளோபல் சிஇஓவான Alexis Nasard நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலையில் பாட்டா நிர்வாகம் புதிய தலைவரைத் தேடி வந்த நிலையில் சந்தீப் சேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பாட்டா குளோபல் சிஇஓ
49 வயதான சந்தீப் கட்டாரியா தற்போது பாட்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவின் தலைவராக உள்ளார், Alexis Nasard நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலையில் பாட்டாவின் சர்வதேச சந்தை வர்த்தகத்தை நிர்வாகம் செய்யச் சந்தீப் கட்டாரியா-வை தேர்வு செய்துள்ளது பாட்டா உயர்மட்ட நிர்வாகம்.

இந்தியத் தலைவர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சத்ய நாடெல்லா, ஆல்பபெட் நிறுவனத்திற்குச் சுந்தர் பிச்சை, மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்கு அஜய் பங்கா, ஐபிஎம் நிறுவனத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா, Reckitt Benckiser நிறுவனத்திற்கு லக்ஷமன் நரசிம்மன், டியாஜியோ நிறுவனத்திற்கு இவன் மென்சிஸ் அப்படிப் பல முன்னணி உலகளாவிய நிறுவனத்திற்கு இந்தியர்கள் தலைவராக இருக்கும் நிலையில் சந்தீப் கட்டாரியா இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்.

உடனடியாகச் சிஇஓ
பாட்டா நிறுவனத்தில் சுமார் 5 வருடம் Alexis Nasard உலகளாவிய வர்த்தகத்தை நிர்வாகம் செய்து வந்த நிலையில், தற்போது கன்டார் என்னும் நிறுவனத்திற்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Alexis Nasard வெளியேறும் காரணத்தால் சந்தீப் கட்டாரியா உடனடியாகக் குளோபல் சிஇஓ பதவியை ஏற்க வேண்டி உள்ளது.

ஐஐடி டெல்லி
சந்தீப் கட்டாரியா ஐஐடி டெல்லியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, 1993ஆம் ஆண்டு XLRI கல்லூரியில் PGDBM-ல் கோல்டு மெடல் பெற்றவர். சுமார் 24 வருடம் யூனிலீவர், யம் பிராண்ட்ஸ், வோடபோன் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றியவர்.
சந்தீப் கட்டாரியா பாட்டா நிறுவனத்தில் சிஇஓ-வாக 2017ஆம் ஆண்டுப் பணியில் சேர்ந்தார்.

வர்த்தகம் வளர்ச்சி
சந்தீப் கட்டாரியா நிர்வாகத்தில் பாட்டா இந்தியாவின் வர்த்தகம் இரண்டு இலக்கு வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் லாப அளவீடுகளும் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்தது. இதேபோல் புதிய வாடிக்கையாளர்களையும், இளம் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ‘Surprisingly Bata' என்ற பிரத்தியேக விளம்பரம் செய்யப்பட்டது. இதன் வாயிலாகவே வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

லாபம்
2019-20ஆம் நிதியாண்டில் ‘Surprisingly Bata' விளம்பரம் மற்றும் சந்தீப் கட்டாரியா நிர்வாகத்தில் பாட்டா இந்தியாவின் மொத்த லாபம் 327 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பாட்டா இந்தியாவின் வருமானம் 3,053 கோடி ரூபாய் அளவிலான வருமானம் அதிகரித்துள்ளது.
சந்தீப் கட்டாரியா குளோபல் சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்டதிற்கு இது முக்கியக் காரணமாக இருக்கிறது.