ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் ஐபிஓ-வின் மாஸ்டர் மைண்ட்: அசோக் சூட்டா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசோக் சூட்டா கடந்த 30 வருடங்களாக இந்திய ஐடி துறையில் முக்கிய இடத்தை பிடித்து தனது பாதையில் தொடர்ந்து வெற்றி கண்டு வருபவர். விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஐடி துறையின் உச்சத்தில் இருந்த போது Mindtree நிறுவனத்தை துவங்கியதில் முக்கிய காரணியாக இருந்து துணை நிறுவனராக இருந்தார். 2007 Mindtree நிறுவனத்தின் ஐபிஓ-வில் ஏற்பட்ட அதே தாக்கத்தை தற்போது மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அசோக் சூட்டா கொடுத்துள்ளார்.

2011ஆம் ஆண்டு ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தனது நெருங்கிய நண்பர்களோடு இணைந்து துவங்கினார் அசோக் சூட்டா. இந்த நிறுவனம் தான் தற்போது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் இறங்கிய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடுக்காக கோரப்பட்ட நிறுவனங்களில் அசோக் சூட்டா-வின் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் முதல் இடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் செய்ததைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கு..! #Paytm #CAITசச்சின் டெண்டுல்கர் செய்ததைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கு..! #Paytm #CAIT

ஐபிஓ

ஐபிஓ

Happiest Minds நிறுவனத்திற்கான ஐபிஓ செப்டம்பர் 2020 7ஆம் தேதி துவங்கப்பட்டு செப்டம்பர் 2020 9ஆம் தேதி முடிவடைந்தது. ஐபிஓ திட்டத்தில் ஒரு பங்கு 2 ரூபாய் முக மதிப்புடன் 165 முதல் 166 ரூபாய் விலையில் ரீடைல் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 42,290,091 பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.

151 மடங்கு

151 மடங்கு

இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களாகவே முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான லாபத்தை அடையாத நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்திய ஐடி சந்தையில் இருந்து ஒரு முன்னணி நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்கும் காரணத்தினால் Happiest Minds நிறுவனத்திற்கு அதிகளவிலான வரவேற்பு இருந்தது.

Happiest Minds நிறுவனம் வெளியிடும் 42,290,091 பங்குகளை விடவும் முதலீட்டாளர்கள் சுமார் 151 மடங்கு அதிகமான பங்குகளை முதலீடு செய்ய கோரி இருந்தனர்

 

அதிரடி லாபம்
 

அதிரடி லாபம்

வியாழக்கிழமை காலையில் பட்டியலிடப்பட்ட Happiest Minds நிறுவன பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 350 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு, முதல் நாள் வர்த்தகத்தில் சுமார் 394.95 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டது.

அதவாது செப் 9ஆம் தேதி 166 ரூபாய் விலையில் முடிந்த ஐபிஓ முதலீடு, ஒரு வார காலத்தில் (இன்று) அதிகப்படியாக 137.34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

100 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை கொடுத்த ஐஆர்சிடிசி மற்றும் டிமார்ட் நிறுவனங்களை விடவும் Happiest Minds ஐபிஓ-வில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

ஐபிஓ-பின்

ஐபிஓ-பின்

Happiest Minds நிர்வாகம் ஐபிஓ-வுக்கு முன் மொத்த பங்கு இருப்பில் 61.77 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், ஐபிஓ வெளியிடுக்கு பின் 53.25 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ites mindtree
English summary

The Mastermind behind 137.3% profit on Happiest Minds IPO: Ashok Soota

The Mastermind behind 137.3% profit on Happiest Minds IPO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X