ஃபேன்சி நம்பருக்கு லட்சக்கணக்கில் பணம்.. இதுக்கு இன்னொரு காரே வாங்கிடலாமே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆடம்பர கார் வாங்கும் கோடீஸ்வரர்கள் அந்த காரின் ஃபேன்சி நம்பருக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

 

ஒரு சிலர் காரின் விலைக்கு இணையாக அல்லது காரின் விலையை விட அதிகமாக ஃபேன்சி நம்பருக்கு கொடுக்கும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் 7 பேர் ஃபேன்சி நம்பருக்காக கொடுத்த தொகை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

 டொயோட்டா ஃபார்ச்சூனர் - 007 - ரூ 34 லட்சம்

டொயோட்டா ஃபார்ச்சூனர் - 007 - ரூ 34 லட்சம்

ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு சொந்தமான இந்த 007 நம்பரை வாங்க இந்தியாவில் ஒரு பெரிய ரசிகர் இருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரின் மீதான காதல் காரணமாக இவர் அந்த நம்பருக்கு கொடுத்த தொகை ரூ.34 லட்சம். 2020 ஆம் ஆண்டில், அகமதாபாத்தை சேர்ந்த டிரான்ஸ்போர்ட்டரான ஆஷிக் படேல் ஒரு புதிய எஸ்யூவியை ரூ. 39.5 லட்சத்திற்கு வாங்கினார், ஆனால் அவர் அதன் நம்பர் பிளேட்டுக்கு மட்டும் ரூ.34 லட்சத்தை கூடுதலாகச் செலுத்தினார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தனது காருக்கு GJ01WA007 என்ற எண்ணை அவர் ரூ.34 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்திருக்கின்றார். என்னைப் பொறுத்தவரை இது பணத்தைப் பற்றியது அல்ல, இந்த எண் எனக்கு அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையைப் பற்றியது என்று கூறியுள்ளார்.

Porsche 718 Boxster - '1' - ரூ 31 லட்சம்

Porsche 718 Boxster - '1' - ரூ 31 லட்சம்

திருவனந்தபுரம் கவுடியாரில் வசிக்கும் கே.எஸ்.பாலகோபால், முன்னணி மருந்து விநியோக நிறுவனமான தேவி பார்மாவின் உரிமையாளர் ஆவார். அவர் தனது நீல நிற போர்ஸ் 718 பாக்ஸ்டர் காருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 30 லட்சம் செலுத்தியுள்ளார். அவர் வாங்கிய நம்பர் கே.எல்-01-சிகே-1 என்பது தான்.

Toyota Land Cruiser LC200 - 001 - ரூ 18 லட்சம்
 

Toyota Land Cruiser LC200 - 001 - ரூ 18 லட்சம்

2017ல் தனது LC200 லேண்ட் க்ரூஸருக்கு ரூ.19 லட்சத்தில் '1' என்ற எண்ணை 'வென்றதால்' கே எஸ் பாலகோபாலின் பெயர் மீண்டும் பட்டியலில் உள்ளது. கேஎல்-01-சிபி-1 என்ற நம்பருக்காக நடந்த ஏலத்தில் வாசுதேவன் ரூ.19 லட்சம் கொடுத்துள்ளார். இதன் மூலம் பாலகோபால் அவர்கள் இந்தியாவின் விலையுயர்ந்த இரண்டு ஃபேன்சி நம்பருக்கு உரிமையாளர் ஆகியுள்ளார்.

Toyota Land Cruiser LC200 - 0001 - ரூ 17 லட்சம்

Toyota Land Cruiser LC200 - 0001 - ரூ 17 லட்சம்

2012 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள சாஹல் டயர்களின் உரிமையாளர் ஜக்ஜித் சிங் சாஹல் தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC200 காருக்கு 17 லட்ச ரூபாய்க்கு CH-01AN-0001 என்ற ஃபேன்சி நம்பரை பெற்றார். சண்டிகர் வரலாற்றில் அதிக கொடுத்து பெறப்பட்ட ஃபேன்சி நம்பர் இதுதான். இதுகுறித்து ஜக்ஜித் சிங் சாஹல் கூறியபோது, 'இந்த எண்ணுக்கு நான் செலுத்திய தொகை அதிகம் தான். இருப்பினும் இது எனது ராசியான எண் என்று கூறியுள்ளார். மேலும் அவரது மொபைல் எண்ணும் 00001 உடன் முடிவடைகிறது என்பதும் இந்த நம்பருக்காகவும் அவர் ஒரு பெரிய தொகையை கொடுத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாகுவார் எக்ஸ்ஜே - '001' - ரூ 16 லட்சம்

ஜாகுவார் எக்ஸ்ஜே - '001' - ரூ 16 லட்சம்

லைவ் கிரியேஷன்ஸ் என்ற திருமண நிர்வாக நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் தனேஜா, சிறுவயதிலேயே டாபாவில் சில ரூபாய்க்கு வேலை செய்து, 2018 ஆம் ஆண்டு தனது புத்தம் புதிய RJ45 CG 001 என்ற காருக்கு ரூ.16 லட்சம் கொடுத்து நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார். 2011 ஆம் ஆண்டு ராகுல் தனது BMW காருக்காக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள VIP 0001 நம்பர் பிளேட்டை ஏற்கனவே வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் -

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் - "0001" - ரூ 12 லட்சம்

பிரபல ​​இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் 13.14 கோடி ரூபாய் விலையில் அதி சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் ஹேட்ச்பேக்கை வாங்கினார் என்ற செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், "0001" என்று முடிவடையும் விஐபி எண்ணுக்கு அவர் ரூ.12 லட்சமும் கொடுத்துள்ளார் என்பது சுவாரஸ்யமான தகவல்.

BMW 5-சீரிஸ் - '1' - ரூ 10.31 லட்சம்

BMW 5-சீரிஸ் - '1' - ரூ 10.31 லட்சம்

ராகுல் தனேஜா எண் கணிதத்தில் வலுவான நம்பிக்கை உள்ளவர். எனவே அவருக்கு எண் 1 நல்லது என்று கருதியதால் அவர் தனது பிஎம்டபிள்யூ 5-சீரிஸின் பதிவுக்காக ரூ. 10.31 லட்சத்தை செலுத்தினார். ஆனால் ஒருசில ஆண்டுகளில் அவர் அந்த காரை விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These are 7 India's most expensive car number plates, Some Cost Most Than A Car

These are 7 India's most expensive car number plates, Some Cost Most Than A Car | ஃபேன்சி நம்பருக்கு லட்சக்கணக்கில் பணம்.. இதுக்கு இன்னொரு காரே வாங்கிடலாமே!
Story first published: Thursday, July 14, 2022, 8:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X