பட்ஜெட் 2023: முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. யாருக்கெல்லாம் லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2023 அறிக்கையில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாகத் தனிநபர் வருமான வரிப் பிரிவில் மொத்தம் 5 அறிவிப்புகள் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் முதலீடு செய்வோருக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்துப் பட்ஜெட் குழுவில் இருந்த டி.வி.சோமநாதன் பேசியுள்ளார்.

Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..! Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!

டி.வி.சோமநாதன்

டி.வி.சோமநாதன்

சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தும் முடிவு மூத்த குடிமக்கள் மற்றும் வங்கிகளை விட அதிக வருமானம் அளிக்கும் பாதுகாப்பான அரசு வைப்புத் திட்டங்களில் பணத்தைச் சேமிக்கும் வாய்ப்பு மூலம் நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான அதிகபட்ச வைப்பு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டம்

மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டம்

இதேபோல் மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு ஒரு கணக்கிற்கு 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதை போல் கூட்டுக் கணக்கிற்கு அதாவது ஜாயின்ட் கணக்கிற்கு 9 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள்

நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள்

இந்த நிலையில் பட்ஜெட் 2023 அறிவிப்புக்குப் பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் உச்சவரம்புகள் சில காலமாக மாறாமல் இருப்பதாகவும், உச்சவரம்பை உயர்த்துவது மூலம் நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பலன் அடைவார்கள் எனத் தெரிவித்தார்.

 100 சதவீதம் பாதுகாப்பு

100 சதவீதம் பாதுகாப்பு

மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்கள் தேவை என்ற எண்ணம் அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் வேளையில் தற்போது உச்சவரம்பை இரட்டிப்பாக்குவது மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை 100 சதவீதம் பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

கூடுதலான வட்டி

கூடுதலான வட்டி

மேலும் மூத்த குடிமக்களுக்கான முதலீட்டுத் திட்டங்களுக்கு வங்கிகளைக் காட்டிலும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் அளிக்கப்படும் காரணத்தால் அதிகபட்ச வைப்பு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது மூலம் அதிகளவிலான பலன் அடைய முடியும்.

 டிவி சோமநாதன்

டிவி சோமநாதன்

டிவி சோமநாதன் இவர் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர் ஆவார். தமிழ்நாடு கேடர் கீழ் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும், பட்ஜெட் தயாரிப்பில் பல ஆண்டுக் காலம் அனுபவமுள்ள முக்கியத் தலைவராக டிவி சோமநாதன் திகழ்கிறார். மத்திய நிதிச் செயலாளராக இருந்து பட்ஜெட் தயாரிப்பை முன்னின்று நடத்துகிறார்.

 நிதிச் செலவினங்கள்

நிதிச் செலவினங்கள்

நிதி செலவினங்களின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகளைச் சரியான முறையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மையில் சோமநாதன் இந்தப் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.

முதலீட்டு வரம்பு

முதலீட்டு வரம்பு

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டங்களில் முதலீட்டு உச்சவரம்பு 1987 முதல் திருத்தப்படவில்லை. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS), முதலீட்டு வரம்பு 2004 இல் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இவ்விரண்டுக்கும் மாற்றப்பட்டு உள்ளது.

அதிகபட்ச வைப்பு வரம்பு

அதிகபட்ச வைப்பு வரம்பு


குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான அதிகபட்ச வைப்பு வரம்பும், மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பும் உயர்த்தப்பட்டதோடு தனிநபர் வருமான வரிப் பிரிவில் முக்கியமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

7 லட்சம்

7 லட்சம்

வருமான வரி தான் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. இதைத் தணிக்கும் வகையில் 7 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate)அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த டாக்ஸ் ரிபேட் அளவு 5 லட்சமாக உள்ளது.

வரி விதிப்புப் பலகை

வரி விதிப்புப் பலகை

நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி விதிப்பு முறையில் இருக்கும் வரிப் பலகை எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் 2.5 லட்சமாக இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

standard deduction சலுகை

standard deduction சலுகை

அனைத்து மாத சம்பளக்காரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அளிக்கப்படும் standard deduction சலுகை புதிய வருமான வரி விதிப்புக் கீழ் 52500 ரூபாய் அளிக்கப்படுகிறது. இது புதிய வருமான வரி விதிப்பு முறையே தேர்வு செய்வோருக்குக் கூடுதல் லாபத்தை அளிக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These budget announcement benefits senior citizens, middle class people says Fin Sec TV Somanathan

These budget announcement benefits senior citizens, middle class people says Fin Sec TV Somanathan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X