கோடியில் புரண்டு தெருக்கோடிக்கு வந்த நட்சத்திரங்கள்.. பாப் கடவுளுக்கே இந்த நிலையா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் மில்லியன் கணக்கில் சம்பாதித்த நட்சத்திரங்கள் திடீரென பணமின்றி ஏழை ஆவதும், ஒரு சிலர் திவால் ஆவதுமான சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

துரதிஷ்டவசமான நிகழ்வுகள், தவறான முடிவெடுப்பது ஆகியவை இந்த நட்சத்திரங்களை திடீரென பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

அவ்வாறு மிகப்பெரிய பணக்கார நட்சத்திரங்களாக இருந்து திடீரென திவால் ஆன நட்சத்திரங்களின் பட்டியலை பார்ப்போம்.

லிண்ட்சே லோகன்

லிண்ட்சே லோகன்

கடந்த 2000 ஆண்டுகளில் ஒரு திரைப்படத்திற்கு 7 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றதாக கூறப்படும் இவர், சில ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென படவாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டார். வெறும் 10 ஆயிரம் டாலருக்கு சில படங்கள் நடித்ததாகவும் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், லிண்ட்சே மீண்டும் 'அமாங் தி ஷேடோஸ்' திரைப்படத்திலும், 2022ஆம் ஆண்டு ரிலீஸாக இருக்கும் திரைப்படமான 'ஃபாலிங் ஃபார் கிறிஸ்மஸ்' திரைப்படத்திலும் நடித்தாலும் இவரது வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது.

பமீலா ஆண்டர்சன்

பமீலா ஆண்டர்சன்

பேவாட்ச்' என்ற தொடரில் நடிப்பதற்கு மட்டும் 6.6 மில்லியன் சம்பாதிப்பதாக கூறப்படும் இவரது சொத்து மதிப்பு 20 மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென 1997ஆம் ஆண்டுக்கு பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறை அவரது வங்கி இருப்பை காலியாக செய்துவிட்டது

டியோன் வார்விக்
 

டியோன் வார்விக்

கடந்த 1960 களில் புகழ்பெற்ற பாப் நட்சத்திரமாக இருந்த இவர் அந்த காலத்திலேயே மில்லியன் கணக்கில் சம்பாதித்ததாக தெரிகிறது. 'ஐ வில் நெவர் ஃபால் இன் லவ் அகைன்' மற்றும் 'வால்க் ஆன் பை' ஆகிய மறக்கமுடியாத வெற்றிகளை பெற்றாலும் பிற்காலங்களில் இவர் 10 மில்லியன் டாலர் வரி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகவும், 2013ஆம் ஆண்டு திவால் நிலைக்கு அவர் விண்ணப்பித்ததாகவும் கூறப்படுகிறது. தவறான நிர்வாகம் காரணமாகவும் அவரை சுற்றி இருந்தவர்கள் தவறாக வழி நடத்தியதாலும் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

லேடி காகா

லேடி காகா

கடந்த 2008-ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரமாக இருந்த இவர் திடீரென இரண்டு ஆண்டுகளில் திவால் ஆகிவிட்டதாக தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். எனக்கே தெரியாமல் நடந்த இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றும், என்னிடம் பணம் இல்லை என்று எல்லோரும் ஏன் சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் பேட்டி அளித்து இருந்தார். இருப்பினும் திவாலான சில ஆண்டுகளுக்கு பிறகு லேடி காகா சில மாதங்களில் 50 மில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது

சாரா, டச்சஸ் ஆஃப் யார்க்

சாரா, டச்சஸ் ஆஃப் யார்க்

கடந்த 1986ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகன் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மருமகளானார். ஆனால் 1992ஆம் ஆண்டு இவர் தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர் ஜீவனாம்சமாக பல மில்லியன் பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் திடீரென அவர் திவால் நிலையை அடைந்ததாகவும் அவருடைய நிலையை கேள்விப்பட்டு இங்கிலாந்து ராணி தனது முன்னாள் மருமகளுக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மீட் லோஃப்

மீட் லோஃப்

பிரபல இசை மேதையான இவர் கடந்த 1980களில் மிகப்பெரிய அளவில் சம்பாதித்தார். ஆனால் திடீரென அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் திவால் ஆனேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும், எனது வீடு உள்பட அனைத்தையும் இழந்தேன் என்றும், எனது பாடல்களின் வெளியீட்டு உரிமையை கூட இழந்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனது 74 வயதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து மீளமுடியாமல் மரணமடைந்தார். இவர் சுமார் 45 வழக்குகளை சந்தித்து அந்த வழக்குகளுக்காக 80 மில்லியன் டாலரை சட்ட செலவுகளுக்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது.

ஜானி டெப்

ஜானி டெப்

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' நட்சத்திரமான இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் மிகப்பெரிய அளவில் சம்பாதித்தார். ஆனால் திடீரென $300,000 மில்லியன் மதிப்பில் மூன்று தீவுகளை வாங்கியதாகவும் அதன் காரணமாக இவர் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தனது முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்று 10 மில்லியன் டாலர் இழப்பீடு பெற்றார். இருப்பினும் அவர் தற்போது மிகப் பெரிய அளவில் பண சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது

நிக்கோலஸ் கேஜ்

நிக்கோலஸ் கேஜ்

ஹாலிவுட் நட்சத்திரமான இவர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 150 மில்லியன் டாலருக்கும் மேல் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பழமையான பொருட்களை மில்லியன் கணக்கில் வாங்கினார் என்றும், அதே நேரத்தில் 15 மாளிகைகளை வாங்கியதன் மூலம் தனது வருமானத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து சந்தித்ததன் காரணமாக அவரது கடன்களை தீர்க்கவே தனது சொத்து முழுவதையும் விற்றதாக கூறப்படுகிறது.

 மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்

பாப் பாடகராக இவர் தனது தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் 500 மில்லியன் டாலர் சம்பாதித்தார். ஆனால் 2000 ஆண்டுகளில் அவர் சம்பாதித்ததை விட மிக அதிகமாக செலவு செய்து கடனில் இருந்ததாக தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு தனது 50வது வயதில் அவர் மரணமடைந்தபோது பயங்கரமான நிதிச் சிக்கலில் இருந்ததாகவும், மில்லியன் கணக்கில் சம்பாதித்த போதும் அவர் இறந்தபோது அவரிடம் எந்த சொத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These stars were once worth millions and famous but not rich

These stars were once worth millions and famous but not rich | மில்லியன் கணக்கில் சம்பாதித்து துரதிஷ்டவசமாக ஏழையான நட்சத்திரங்கள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X