20% வரை சம்பள குறைப்பு.. 2000 மேனேஜர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்.. என்ன தான் ஆச்சு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜேடி.காம் (JD.com.inc) நிறுவனத்தின் 2,000 மேலாளர்களுக்கு 20% வரை சம்பளத்தினை குறைத்துள்ளதாக தெரிகிறது.

 

பில்லியனர் ஜேடி.காமின் நிறுவனர் ரிச்சர்ட் லியு தனது சொந்த பணத்தில் 100 மில்லியன் யுவானை, ஊழியர்களின் நலனுக்காக நன்கொடையாக அளிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

எனினும் இது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. உலகம் முழுக்க பற்பல பணி நீக்க நடவடிக்கை குறித்தான அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், சீனாவில் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறைவு. எனினும் ஜேடியின் இந்த அறிவிப்பு சீனாவும் மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.

நேரம் பார்த்து காய் நகர்த்தும் சீனா-வின் டிக்டாக்.. பலே அறிவிப்பு..! நேரம் பார்த்து காய் நகர்த்தும் சீனா-வின் டிக்டாக்.. பலே அறிவிப்பு..!

ஜேடி.காம்

ஜேடி.காம்

அலிபாபா குழுமத்திற்கு பின்பாக சீனாவில் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர், சமீபத்தில் வாங்கிய அதன் லாகிஸ்டிக்ஸ் சேவை நிறுவனமான டெப்பான் உட்பட ஊழியர்களுக்கு உதவுவதற்காக 10 பில்லியன் யுவான் நிதியை கொடுக்கலாம் எனவும் தெரிகிறது.

சீனாவின் பொது வளம் திட்டம்

சீனாவின் பொது வளம் திட்டம்

ஜேடி.காமின் இந்த நடவடிக்கையானது, சீனாவின் ஏழைகள் பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் பொருட்டு தனது கொள்கைகள், பொருளாதார பாதையை வடிவமைக்கும் திட்டம் அவசியமான ஒன்று என சமீபத்தில் சீனா அறிவித்திருந்தது. இந்த பொது வளம் திட்டம் நாட்டு மக்களை நோக்கிய திட்டம் எனவும் கூறியது.

உள்ளூர் சந்தைகளுக்கு முன்னுரிமையா?
 

உள்ளூர் சந்தைகளுக்கு முன்னுரிமையா?

சீனாவின் இந்த அறிவிப்பினால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சீனா அளிக்கும் முன்னுரிமை உள்ளூர் சந்தைகளின் பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் திட்டத்திற்காக சீனாவின் மாபெரும் ஜாம்பவான் ஆன அலிபாபா, ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு 15.5 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

டென்சென்ட்

டென்சென்ட்

இதேபோல சீனாவின் மற்றொரு டெக் ஜாம்பவான் ஆன டென்சென்ட் நிறுவனம், 7.75 பில்லியன் டாலர் நிதியினை இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையினால் நடுத்தர வர்த்தகத்தினரும் கீழ்தட்டு மக்களும் பயன்பெற முடியும் என சீனா நினைக்கிறது. இதன் காரணமாக வாய்ப்புகள் பலவும் உருவாகும் என்றும் சீனா எதிர்பார்க்கிறது.

வருமானத்தை அதிகரிக்கணும்

வருமானத்தை அதிகரிக்கணும்

சர்வதேச அளவில் சீனாவில் 50% மக்கள் விலையுயர்ந்த பொருட்களையே வாங்குகின்றனர். ஆக சீனாவின் திட்டம் பலத்த அடி வாங்கும். ஆக சீன அரசு அதனை விடுத்து அவர்களின் சராசரி வருமானத்தை அதிகரிக்க திட்டமிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகரிக்கும் கட்டுபாடுகள்

அதிகரிக்கும் கட்டுபாடுகள்

இதே அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட உறுதியளித்துள்ளன. ஆனால் தற்போது வரையில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒரு புறம் எனில் மறுபுறம் திடீரென பல துறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு

நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு

தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மேலும் சீனாவில் கடினமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இது நிறுவனங்கள் பலவும் அவரவர் நாடுகளுக்கு செல்ல வழிவகுக்கலாம். உள்நாட்டு நிறுவனங்கள் தான் அவசியம் என்றால், வெளி நாட்டு நிறுவனங்கள் தேவையில்லையா? என்ற கேள்வியையும் நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

இது தான் பிரச்சனை

இது தான் பிரச்சனை

சீனாவில் நிலவி வரும் இத்தகைய குழப்பமற்ற நிலைக்கு மத்தியில் சீன நிறுவனங்களே அதன் தாக்கத்தினை எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் தான் சீனாவின் முன்னணி நிறுவனமான ஜேடி.காமின் அறிவிப்பும் வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This china firm cut salaries up t0 20% for 2000 managers

JD.com inc seems to have reduced the salaries of the company's 2,000 managers by 10 to 20%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X