கிராமமும், விவசாயமும் ரொம்ப முக்கியம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் அரசுக்கு முக்கியக் கோரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேளையில் கிராமமும், விவசாயமும் மிகவும் முக்கியம் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் அரசுக்கு முக்கியக் கோரிக்கை வைத்துள்ளது.

பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன? பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

விவசாயத் துறை

விவசாயத் துறை

பொருளாதார ஆய்வறிக்கையில் 2022-23 , கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமான 4.6 சதவீதத்துடன் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை பெருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு உறுதியான வருவாயை உறுதி செய்ய விலை ஆதரவு (குறைந்தபட்ச ஆதரவு விலை), பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், இத்துறையை மேம்படுத்துவதற்கான தேவைப்படும் நேரத்தில் தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் விவசாயத் துறையின் வளர்ச்சி முக்கியக் காரணம் என்று பொருளாதார ஆய்வறிக்கை சர்வே கூறுகிறது.

கடன்
 

கடன்

 

மேலும் விவசாயிகளுக்குக் கடன் கிடைக்கும் தன்மை, இயந்திரமயமாக்கலை எளிதாக்குதல் மற்றும் தோட்டக்கலை மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் வாயிலாகவும் விவசாயத் துறை ஆண்டுக்குச் சராசரியாக 4.6 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

விவசாயிகளின் வருமானம்

விவசாயிகளின் வருமானம்

இந்தத் தலையீடுகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான கமிட்டியின் பரிந்துரைகளின்படி இருப்பதாகக் கணக்கெடுப்புக் கவனிக்கிறது.

மொத்த மக்கள் தொகை

மொத்த மக்கள் தொகை

இதேபோல் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் (2021 தரவு) கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், இதில் 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு இருப்பதாகவும் பொருளாதார ஆய்வு 2023 குறிப்பிடுகிறது.

கிராமப்புற வளர்ச்சி

கிராமப்புற வளர்ச்சி

எனவே, கிராமப்புற வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்காகக் கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Thrust on rural development and Agriculture sector remains buoyant

Thrust on rural development and the Agriculture sector remains buoyant
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X