தமிழ்நாட்டு அரசு அதிகப்படியான வேலைவாய்ப்பு, வர்த்தகத்தை உருவாக்குவதற்காகப் பல முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக், தமிழ்நாடு அரசுடன் முக்கியமான திட்டத்தில் இணைந்துள்ளது.
5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்?
இக்கூட்டணி மூலம் ஜெனரல் எலக்ட்ரிக் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் சென்னையில் முதலீடு செய்ய உள்ளது.

ஜெனரல் எலக்ட்ரிக் ஏவியேஷன்
ஏர்கிராப்ட் இன்ஜின் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் ஏவியேஷன் அல்லது ஜிஇ ஏவியேஷன் நிறுவனம் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) உடன் இணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சிறப்பு மையத்தை (CoE) அமைக்க உள்ளது.

சேர்க்கை தொழில்நுட்பம்
டிட்கோ-வின் சிறப்புப் பிரிவு, சேர்க்கை ( Additive) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் சூழலை அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தச் சென்டர் ஆப் எக்சலென்ஸ் அமைக்கப்பட உள்ளது. மேலும் Additive உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்கவும் வாய்ப்பு உள்ளது.

3டி பிரிண்டிங்
ஆடிட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் (AM) என்பதை 3டி பிரிண்டிங் என்றும் அழைக்கப்படும். இது உலகளவில் வேகமாக வளர்ந்து வகும் ஒரு உற்பத்தித் தொழில்நுட்பமாகும். தற்போது இந்தத் தொழில்நுட்பம் விண்வெளி, வாகனம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியத் தொழில்நுட்பம்
இந்த ஆடிட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் (AM) வழக்கமான உற்பத்தியைப் போலன்றி, கூடுதல் செலவு சுமையின்றிச் சிக்கலான வடிவமைப்புகளை மிகவும் எளிதாக உற்பத்தி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்பம் மூலம் சற்றும் நினைத்து பார்க்காத வடிவத்திலும் பொருட்களை வடிவமைக்க முடியும் என்பதால் பல முக்கியத் துறையில் இதன் பயன்பாட்டு அதிகரித்துள்ளது.

141.26 கோடி ரூபாய் முதலீடு
டிட்கோ மற்றும் ஜீஇ ஏவியேஷன் 2021ஆம் ஆண்டில் இதற்கான ஒப்பந்தம் செய்தது. இந்தச் சென்டர் ஆப் எக்சலென்ஸ் அமைக்கச் சுமார் 141.26 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் இரு தரப்பும் 2 பிரிவுகளாக முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளது.

ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறை
இப்புதிய அலுவலகத்தின் மூலம் இக்கூட்டணி ஏவியேஷன் துறையில் மட்டும் அல்லாமல் உற்பத்தித் துறைக்கான அனலிட்டிக்கல் சேவைகளையும் உருவாக்க உள்ளது. இது மாநிலத்தின் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டை ஏரோஸ்பேஸ் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி ஹப் ஆக மாற்றும் திட்டத்தின் முதல் படியாகவும் அமையும்.