கூகுள்-ஐ ஓரம் கட்டிய டிக்டாக்.. என்னடா சொல்றீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெ ப்ரவுசருக்கு போனாலே அனைத்து மக்களுக்கும் இயல்பாகச் செய்யக்கூடிய விஷயம் கூகுள் இணையதளத்திற்குச் செல்வது, பல நேரம் இண்டர்நெட் இணைப்புச் சரியாக உள்ளதா என்பதைக் கூடக் கூகுள் சர்ச் வாயிலாகத் தான் உறுதி செய்வோம், அந்த அளவிற்குக் கூகுளும் மக்களும் இணை பிரியாத ஒன்றாக இருக்கிறது.

இதனாலேயே நீண்ட காலமாக உலகிலேயே மிகவும் பிரபலமான இணையதளம் என்றாலே இது கூகுள் தான், என்று ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இப்போது கதை மொத்தமாக மாறியுள்ளது.

டிக்டாக்

டிக்டாக்

உலகிலேயே முன்னணி ஷாட் வீடியோ தளமாக இருக்கும் டிக்டாக் தான் 2021ஆம் ஆண்டின் உலகிலேயே மிகவும் பிரபலமான இணையதளமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் நிறுவனத்தின் கூகுள் இணையதளம் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 Cloudflare நிறுவனம்

Cloudflare நிறுவனம்

அமெரிக்காவின் முன்னணி ஐடி செக்யூரிட்டி நிறுவனமான Cloudflare சமீபத்தில் செய்த ஆய்வில் கூகுள் இணையதளத்தை விடவும் டிக்டாக் தளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டிக்டாக் உலகிலேயே அதிகப்படியான மக்களால் பார்க்கப்படும் ஒரு இணையதளமாக மாறியுள்ளது.

 கூகுள்-ஐ பின்னுக்குத் தள்ளி டிக்டாக்

கூகுள்-ஐ பின்னுக்குத் தள்ளி டிக்டாக்

2021ல் கூகுள்-ஐ பின்னுக்குத் தள்ளி டிக்டாக் தளம் பிப்ரவரி, மார்ச், ஜூன் அதன் பின் ஆகஸ்ட் மாதம் வரையில் முதல் இடத்தில் இருந்தது என Cloudflare தெரிவித்துள்ளது. 2020ல் முதல் இடத்தில் கூகுள், அதைத் தொடர்ந்து டிக்டாக், அமேசான், ஆப்பிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ் ஆகியவை டாப் 10 பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

டிக்டாக் குறைந்த காலகட்டத்தில் அதிரடியாக வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தான். கொரோனா காரணமாக உலகம் முழுவதும் 2 வருடமாக லாக்டவுனில் இருந்து வருகிறது.

 பொழுதைப் போக்க

பொழுதைப் போக்க

இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்களது பொழுதைப் போக்க அதிகளவில் டிக்டாக் வீடியோக்களைப் பார்த்து ரசித்த காரணத்தால் உலகிலேயே அதிகமானோரால் பார்க்கப்பட்ட இணையதளமாக உருவெடுத்துள்ளது.

 டிக்டாக் சரிவு

டிக்டாக் சரிவு

ஆனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்து மக்கள் தங்களது வேலைகளுக்குச் செல்ல துவங்கியதற்குப் பின்பு டிக்டாக் பயன்பாடு பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் யூடியூப், பேஸ்புக் மற்றும் இதர பல தளங்கள் ஷாட் வீடியோ சேவையை அளிக்கும் காரணத்தாலும் டிக்டாக்-ஐ பயன்படுத்துவோரும், பயன்படுத்தும் நேரமும் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TikTok Dethrones Google to Become Most Popular Website in 2021 says Cloudflare

TikTok Dethrones Google to Become Most Popular Website in 2021 says Cloudflare கூகுள்-ஐ ஓரம் கட்டிய டிக்டாக்.. என்னடா சொல்றீங்க..!
Story first published: Saturday, December 25, 2021, 20:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X