டிக்டாக்-ன் புதிய சீஇஓ.. இந்த முறை சீன அதிகாரி நியமனம்.. எதுக்குப் பிரச்சனை..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் பிரபலமான சீனாவின் டிக்டாக் செயலியை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லவும், அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பாதைக்கு வழிநடத்தவும் டிக்டாக்-ன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் அமெரிக்காவின் மிகப் பிரபலமான டிஸ்னி-யின் உயர் அதிகாரியான கெவின் மேயர்-ஐ நியமித்தது.

 

ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் டிக்டாக் மற்றும் சீன நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் தடையின் காரணமாக அதிகளவிலான நெருக்கடியைச் சந்தித்தது.

ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சூப்பர் சலுகை.. யாருக்கும் கிடைக்காதது..!

இந்தச் சூழ்நிலையில் சீன வர்த்தகத்தில் இருந்து டிக்டாக்-ஐ தனியாகப் பிரித்து அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடந்த போது அதாவது ஆகஸ்ட் 2020ல் கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மொத்தமாக வெளியேறினார்.

 கெவின் மேயர் ராஜினாமா

கெவின் மேயர் ராஜினாமா

கெவின் மேயர் வெளியேறிய காரணத்தால் இடைக்காலச் சிஇஓவாக வெனேசா பாபாஸ் பணியாற்றி வந்த நிலையில் தற்போது டிக்டாக் புதிய சீஇஓ-வை நியமித்துள்ளது. இதன் வாயிலாக வெனேசா பாபாஸ் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாவது சிஓஓ-வாகத் தனது பணியைத் துவங்க உள்ளார்.

 சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

உலகப் பிற நாட்டு நிறுவனங்களை விடவும் சீன நிறுவனங்களில் வேறு நாட்டவர் உயர் பதவி வகிப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. அந்த வகையில் டிக்டாக் இந்தப் பிரச்சனையை உணர்ந்து கெவின் மேயர்-ஐ தொடர்ந்து மீண்டும் ஒரு சீனரையே தலைவராக நியமித்துள்ளது.

 பைட்டான்ஸ் சிஎப்ஓ
 

பைட்டான்ஸ் சிஎப்ஓ

சமீபத்தில் பைட்டான்ஸ் தலைமை நிதியியல் அதிகாரி பதவியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரும், சியோமி நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியுமான ஷாவ் ஜி சிவ் (Shou Zi Chew) என்பவரை நியமித்தது. சியோமி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இவர் மார்ச் 2021ல் தனது பணியைத் துவங்கினார்.

 ஷாவ் ஜி சிவ் புதிய சிஇஓ

ஷாவ் ஜி சிவ் புதிய சிஇஓ

தற்போது டிக்டாக் அதாவது சீனா (douyin) மற்றும் ஹாங்காங் (douyin) நாடுகளில் இருக்கும் வர்த்தகத்தைத் தாண்டி உலக நாடுகளில் இருக்கும் வர்த்தகம் தான் டிக்டாக் கீழ் உள்ளது. இந்நிலையில் ஷாவ் ஜி சிவ்-க்கு கூடுதல் பொறுப்பாக டிக்டாக்-ன் சிஇஓ பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.

 சிங்கப்பூர் டிக்டாக்

சிங்கப்பூர் டிக்டாக்

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில் ஆசிய வர்த்தகத்தைச் சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து தான் டிக்டாக் நிர்வாகம் செய்து வருகிறது. இதன் மூலம் ஷாவ் ஜி சிவ் இனி சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TikTok got new CEO Shou Zi Chew after Kevin Mayer left

TikTok latest update.. TikTok got new CEO Shou Zi Chew after Kevin Mayer left
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X