வெறும் 3 மாதத்தில் ராஜினாமா.. டிக்டாக் சீஇஓ திடீர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் டிக்டாக், அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் வர்த்தகம் மற்றும் சேவை அளிக்க முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கெவின் மேயர் தனது பதிவி விலகியுள்ளார்.

 

டிக்டாக் உலக நாடுகளில் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், டிக்டாக் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே டிக்டாக் சீன நிறுவனமாக இருந்தாலும் அமெரிக்கரான கெவின் மேயரை சிஇஓ-வாக நியமித்தது.

ஆனால் இவரது பதவி விலகல் டிக்டாக்-ன் சட்டச் சிக்கல்கள் அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு! உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்!15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு! உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்!

பைட் டான்ஸ்

பைட் டான்ஸ்

டிக்டாக்-ன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் சீனாவில் duyoin என்ற பெயரில் இதே சேவையை அளித்து வருகிறது. ஆனால் பிற நாடுகளில் டிக்டாக் என்ற பெயரில் தான் சேவை அளிக்கிறது. சீனா-வை தாண்டி டிக்டாக் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்ற நிலையில், பைட் டான்ஸ் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்துடன் களத்தில் இறங்கியது.

இந்தத் திட்டத்தின் முதல் படி தான் டாக்டாக்-ஐ தனி நிறுவனமாகப் பிரித்து, இந்த நிறுவனத்திற்குத் தனியாக ஒரு நிர்வாகக் குழுவை அமைப்பது என்பது. இப்புதிய நிர்வாகத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் கெவின் மேயர். டிக்டாக் நிறுவனத்திற்கு முன்பு கெவின் மேயர் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் D2H சேவை பிரிவிற்குத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

3 மாதம்

3 மாதம்

டிக்டாக்-ன் சிஇஓ-வாகக் கெவின் மேயர் நியமிக்கப்பட்ட போது சர்வதேச நிறுவனங்களும், சமுக வலைதள நிறுவனங்களும் வியந்து பார்த்தது. ஆனால் டிக்டாக்-ன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட 3 மாதத்தில் கெவின் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டிக்டாக் வழக்கு
 

டிக்டாக் வழக்கு

அமெரிக்காவில் 90 நாட்கள் கெடு கொடுக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிக்டாக் நிறுவனத்தின் மீது தடை விதித்த நிலையில், டிக்டாக் அமெரிக்கா நீதிமன்றத்தில் அதிபர் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளது.

கடந்த 1 மாதமாக டிக்டாக் நிறுவனத்திற்கு வந்த பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு கெவின் மேயர், தற்போது அதிபரின் உத்தரவிற்கு எதிராகத் தொடுத்த வழக்கிற்குப் பின் டிக்டாக்-ன் சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய தலைவர்

புதிய தலைவர்

டிக்டாக்-ன் சிஇஓ பதவியைக் கெவின் மேயர் ராஜினாமா செய்து விட்ட நிலையில், தற்காலிக தலைவராக அமெரிக்க வர்த்தகத்தின் நிர்வாகத் தலைவர் Vanessa Pappas-அவர்களைத் தற்காலிக சிஇஓ-வாக நியமித்துள்ளது டிக்டாக் நிர்வாகம்.

ஊழியர்கள் கருத்து

ஊழியர்கள் கருத்து

கெவின் முடிவில் எங்களுக்கு எவ்விதமான அதிர்ச்சியும் இல்லை, அவர் புதிய ஊழியர் என்பதால் முழுமையான அதிகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை, மேலும் முக்கிய நிர்வாக முடிவுகள் மற்றும் பணிகள் அனைத்தும் பைட் டான்ஸ் நிறுவனர் Zhang Yiming தான் மேற்கொண்டு வருகிறார் எனச் சில டிக்டாக் ஊழியர்கள் ரெயூட்டர்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் முடிவு

விரைவில் முடிவு

தற்போது இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டிக்டாக் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கெவின் மேயர் விலகல் குறித்த அறிக்கையில் பைட் டான்ஸ் தலைவர் Zhang Yiming தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TikTok New US CEO Kevin Mayer quits in Just 3 months After company sued US Govt for ban

TikTok New US CEO Kevin Mayer quits in Just 3 months After company sued US Govt for ban
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X