பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தகவல் பாதுகாப்பு உட்படப் பல்வேறு காரணங்களுக்காக டிக்டாக் உட்படப் பல்வேறு சீன நாட்டின் செயலியை நிரந்தரமாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் டாக்டாக் செயலி தனது இந்திய வர்த்தகத்தில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. தற்போது வெளியான தகவல்கள் படி டிக்டாக் தனது சொத்துக்களைக் கிளான்ஸ் தளத்திற்கு விற்பனை செய்ய முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் சாப்ட்பேங்க் தலைமை வகிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
கிளான்ஸ் ஏற்கனவே ஷாட் வீடியோ சேவைக்காக ரோபோசோ-வை கைப்பற்றிய நிலையில், இதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள கிளான்ஸ்-ன் தாய் நிறுவனமான இன்மொபி திட்டமிட்டு டிக்டாக் உடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
இன்மொபி நிறுவனத்தைப் போலவே டிக்டாக்-ன் தாய் நிறுவனத்திலும் சாப்ட்பேங்க் முதலீடு செய்துள்ளதால், சாப்ட்பேங்க் தலைமையில் டிக்டாக் தனது சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் டிக்டாக், கிளான்ஸ், சாப்ட்பேங்க் மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், இந்தச் சொத்து விற்பனைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தியாவில் டிக்டாக் சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.