திருப்பதிக்கு இவ்வளவு சொத்தா? டன் கணக்கில் தங்கமா? அதோட ஒரு லட்டு செய்தி சொல்லிருக்காங்களே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே பணக்கார கடவுள்களில் ஒருவர், நம் திருப்பதி வெங்கடாசலபதி.

பக்தர்கள் வந்து பணத்தைக் கொட்டுவது, துலாபாரம் போடுவது, தங்கம் காணிக்கை கொடுப்பது என பிரார்த்தனைகள் லிஸ்ட் மிகப் பெரியது. ஆகையால் எப்போதும் திருப்பதி பெருமால் பணத்திலேயே திளைப்பார்.

இவருக்கு இருக்கும் சொத்து பத்துக்களைச் சொன்னால், திருப்பதி வெங்கடாசலபதியின் மீது உங்களுக்கு மரியாதை அதிகரிக்கலாம். சரி விஷயத்துக்கு வருவோம்.

தரிசனம்

தரிசனம்

கடந்த மார்ச் 20, 2020 முதல், கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணத்தால், திருப்பதி கோவிலுக்கு யாரும் சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. எப்போது திறப்பார்கள் என்கிற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு மத்தியில் லட்டு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.

லட்டு செய்தி

லட்டு செய்தி

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு 175 கிராம் எடை உள்ள லட்டை, 50 ரூபாய் மேனிக்கு விற்பார்கள். ஆனால் இனி, லாக் டவுன் காலத்தில், அதே லட்டை 25 ரூபாய்க்கு (50 சதவிகிதம் குறைந்த விலையில்) விற்க இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்லி இருக்கிறார்கள்.

எங்கு விற்பனை

எங்கு விற்பனை

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 13 மாவட்ட தலைமையகங்களிலும், ஹைதராபாத், சென்னை, பெங்களூரூ போன்ற பெரு நகரங்களிலும் விற்க இருக்கிறார்களாம். மேலே சொன்ன இடங்களில் இருக்கும் டிடிடி (Tirumala Tirupati Devasthanam) கல்யாண மண்டபங்கள் மற்றும் உதவி மையங்கள் வழியாக விற்க இருக்கிறார்களாம்.

தொடரும் காணிக்கை

தொடரும் காணிக்கை

மக்கள், திருப்பதி தேவஸ்தானத்துக்கு வந்து, கோவிந்தராஜனை தரிசித்து காணிக்கை செலுத்த முடியவில்லை என்றாலும், E- Hundi சேவை வழியாக, மக்கள் காணிக்கைகளைச் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறார்களாம். கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில் மட்டும் 1.97 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறார்களாம். ஏப்ரல் 2019-ஐ விட சுமார் 18 லட்சம் ரூபாய் அதிகமாகச் செலுத்தி இருக்கிறார்களாம்.

சம்பளம்

சம்பளம்

அதே போல திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது, தேவஸ்தானம் நிதி நெருக்கடியில் இருக்கிறது என்கிற வதந்திகளை மறுத்து இருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். அதோடு "டிடிடி ஊழியர்களுக்கு, நிர்வாகம் வழக்கம் போல சம்பளத்தைக் கொடுத்து வருகிறோம். மே, ஜூன் மாதத்திலும் கொடுப்போம்" எனச் சொல்லி இருக்கிறது டிடிடி நிர்வாகம்.

சொத்து பத்து

சொத்து பத்து

லைவ் மிண்ட் பத்திரிகை கணக்குப் படி, திருப்பதி வெங்கடாசலபதி கடவுளுக்கு சுமாராக 9 டன் தங்கம் (9,000 கிலோ) இருக்கிறதாம். அதோடு சுமாராக 14,000 கோடி ரூபாய்க்கு ஃபிக்ஸட் டெபாசிட் மட்டும் இருக்கிறதாம். 14,000 கோடிக்கு 6 % வட்டி போட்டால் கூட, ஆண்டுக்கு 840 கோடி ரூபாய் அசால்டாக வருமானம் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையாவே திருப்பதி வெங்கடாசலபதி பெரிய கோடிஸ்வரர் தான்யா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tirupati temple gold FD details and tirupati laddus at 50 percent discount

Do you know how much money and gold does the tirupati venkatachalapathy owns? Tirupati devasthanam is going to sell laddus at 50 percent discount in coronavirus lock down period.
Story first published: Thursday, May 21, 2020, 11:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X