கடிகாரத்துறையில் தனித்துவமான, உலகின் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றான டைட்டன் நிறுவனம், துபாயில் தனது தனிஷ்க் ஷோரூமினை தொடங்கியுள்ளளதாக அறிவித்துள்ளது.
இது இந்தியாவுக்கு வெளியே திறக்கப்படும் முதல் ஷோரூம் ஆகும். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், துபாயில் எங்கள் செயல்பாடுகள் தொடங்கியவுடன், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கும், என்ஆர்ஐ-க்களுக்கும் அணுகக்கூடிய ஒரு பிராண்டாக இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி கே வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கடையை இந்தியாவின் ஐக்கிய அரபு எமிராட் தூதர் அகமது அல்பன்னா மற்றும் துபாயின் இந்திய கவுன்சில் ஜெனரல், வடக்கு எமிரேட்ஸ் அமன் பூரி ஆகியோர் இந்த கடையை திறந்து வைத்தனர்.
லாபத்தில் 70% வளர்ச்சி.. முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த சன் பார்மா..!

பிரத்தியேக இணையதளம்
அதோடு தனிஷ்க் நிறுவனம் அதன் பிரத்தியேக தளத்தினையும் தொடங்கியுள்ளது. அதில் தனது தனித்துமான பொருட்களையும் பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் அதன் தனித்துவமான சேகரிப்புகளை துபாய்க்கு கொண்டு வருவதில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளர்ச்சியினை தூண்டும் கொரோனா
கொரோனா தொற்று நோய் நம்மை இன்னும் விழிப்புடன் இருக்கவும், இந்த நெருக்கடியான நிலையினை வாய்ப்பாக மாற்றவும் நம்மைத் தூண்டுகின்றது. இது இந்தியாவிலேயே எங்களுக்கு பெரும் ஊக்கமளித்துள்ளது. எங்களது வேறுபட்ட தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் சேவை, தரமான தங்கம் உள்ளிட்ட அம்சங்களுடன், துபாயில் நாங்கள் எங்களது செயல்பாடுகளை தொடங்க எதிர் நோக்குகிறோம் என்று டைட்டன் நிறுவனத்தின் சி ஓ ஒ - சர்வதேச வர்த்தக பிரிவு குருவில்லா மார்கோஸ் கூறியுள்ளார்.

நிகரலாபம் சரிவு
இந்த நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தனது செப்டம்பர் காலாண்டு முடிவினை அறிவித்துள்ளது. அதன் படி அதன் நிகரலாபம் கிட்டதட்ட 38% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டாடா குழும நிறுவனமான இது, அதன் நிகரலாபம் 320 கோடி ரூபாயில் இருந்து, 199 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தேவை அதிகரிக்கும்
இதே வருவாய் 1.72% குறைந்து, 4,389 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் கொரோனாவிற்கு பின்னர் ஜூவல்லரி துறையில் மீள்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கும் என்றும் இந் நிறுவனம் கூறியுள்ளது. இது அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் தனது வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக துபாயில் விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.