ஆதார் - மின்சார எண் இணைப்பு.. ஆன்லைனில் செய்வது எப்படி..? ரொம்ப ஈசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு பெற்றுள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆதார் எண் இணைப்பதற்காகச் சிறப்பு முகாம்களையும் மின்சார வாரியம் அமைத்துள்ளது. அதேபோல், ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண் இணைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பது தான் இப்போது பார்க்க போகிறோம்.

பங்களாதேஷ்-க்கு மின்சார ஏற்றுமதி.. பட்டையை கிளப்பும் கௌதம் அதானி..! பங்களாதேஷ்-க்கு மின்சார ஏற்றுமதி.. பட்டையை கிளப்பும் கௌதம் அதானி..!

TNEB நடவடிக்கை

TNEB நடவடிக்கை

அனைவரும் ஆதார் எண்-ஐ மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, TNEB உடன் ஆதார் எண்-ஐ இணைக்காத நுகர்வோரிடமிருந்து மின்சாரக் கட்டணங்களை வசூலிக்க TANGEDCO அலுவலகங்கள் மறுக்கின்றதாகவும் கூறப்படுகிறது.

 முழுமையாகத் தகவல்

முழுமையாகத் தகவல்

மின் இணைப்பு பெற்றுள்ளவர்களின் விவரங்களை முழுமையாகப் பெறும் வகையில் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதேபோல் ஆதார் எண் இணைப்பதால் தற்போது தமிழக அரசு அளிக்கும் எந்த மானியமும் ரத்து செய்யப்படாது என்றும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

100 யூனிட் இலவசம்
 

100 யூனிட் இலவசம்

உதாரணமாக வீடுகளுக்கு ஒவ்வொரு பில்லிங் சைக்கிள்-க்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்பட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆதார் எண்

ஆதார் எண்

ஆதார் எண் இணைப்பதற்காகச் சிறப்பு முகாம்களையும் மின்சார வாரியம் அமைத்துள்ளது. டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் இணைப்பு

ஆன்லைன் இணைப்பு

அதேபோல், ஆன்லைன் மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. நீங்களும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றால் இதைப் பின்பற்றுங்கள்.

வழிமுறை

வழிமுறை

படி 1: TNEB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். இது தான் இணைய முகவரி adhar.tnebltd.org/Aadhaar/

படி 2: உங்கள் சேவை இணைப்பு எண் (மின் இணைப்பு எண்), உங்கள் மொபைல் எண் பற்றிய விவரங்களை அளித்துப் பாதுகாப்பு கேப்ட்சாவை உள்ளிட்டு Enter என்பதை ஐ அழுத்தவும்.

படி 3: OTP ஐ உருவாக்குவதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்கப்படும். OTP ஐ உள்ளிட்டு உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும்.

படி 3: குடியிருப்பாளரின் விவரங்களை வழங்கவும்.

படி 4: இப்போது TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை எண்ணை வழங்கவும்.

படி 5: ஆதாரில் உங்கள் பெயரை உள்ளிடவும்.

படி 6: உங்கள் ஆதார் ஐடியை பதிவேற்றவும்

படி 7: படிவத்தைச் சமர்ப்பிக்கவும். ஒப்புகை ரசீதையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TNEB - Aadhaar Online linking step-by-step guide

TNEB - Aadhaar Online linking step-by-step guide; How to link TNEB - Aadhaar number
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X