ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும்.. டோக்கியோ மருத்துவர் அமைப்பு கோரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமாக மக்களைப் பாதித்து வரும் வேளையில், உலகின் 3வது பெரும் பொருளாதார நாடாக விளங்கும் ஜப்பான் நாட்டில் அடுத்த சில வாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் கொரோனா 4வது தொற்று அலை இந்நாட்டை மிகவும் மோசமான வகையில் பாதித்துள்ளது.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் கேன்சர், இருதய நோய் ஆகிய மோசமான நோய்களைக் கொண்டுள்ள மக்களை வீட்டிற்கு அனுப்பப்பட்டுக் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வருகிற ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்க உள்ளது.

 ஜப்பான் நாடு

ஜப்பான் நாடு

ஜப்பான் நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள வேளையிலும், மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாத நிலையிலும் வீட்டிலேயே தங்கவைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஓசாகா பகுதியில் வீட்டில் சிகிச்சை பெற்ற பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் மருத்துவ அமைப்பு ஜப்பான் அரசுக்கு மிக முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளது.

 டோக்கியோ மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைப்பு

டோக்கியோ மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைப்பு

ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வேளையில் போட்டிகளை எப்படி நடத்துவது என்று ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில் டோக்கியோ மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைப்பு (Tokyo Medical Practitioners Association) அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் முக்கியமான கடிதம் அனுப்பியுள்ளது, இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 ஒலிம்பிக் போட்டிகள்
 

ஒலிம்பிக் போட்டிகள்

தற்போதைய சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்துவது தான் சரி, மக்களின் நடமாட்டம் தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படுவோரும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த நிலையை உருவாக்க வேண்டாம் என டோக்கியோ மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைப்பு தனது கடித்ததில் தெரிவித்துள்ளது.

 கொரோனா தொற்றுக்கு ஜப்பான் காரணம்

கொரோனா தொற்றுக்கு ஜப்பான் காரணம்

மேலும் ஜப்பான் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை நடந்த கடமைப்பட்டு உள்ளது என்பது தெரியும், ஆனால் இந்தப் போட்டிகள் முடிக்கப்படும் வேளையில் உலகளவில் ஏற்படும் கொரோனா தொற்றுக்கு ஜப்பான் காரணமாக இருக்கும் எனவே ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதைக் கைவிட வேண்டும் என இக்கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

அரசுக்குக்

அரசுக்குக்

டோக்கியோ மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைப்பு இக்கடிதத்தை ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே, ஒலிம்பிக் போட்டி அமைப்பின் தலைவர் சீகோ ஹாஷிமோடோ ஆகியோருக்கு அனுப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tokyo medical body urges to cancel Olympic Games due to Covid-19

Tokyo medical body urges to cancel Olympic Games due to Covid-19
Story first published: Wednesday, May 19, 2021, 16:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X