இன்றைய இளமை தலைமுறையினர் வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கிய உடன் கிரெடிட் கார்டையும் சேர்த்து வாங்கிவிடுகிறார்கள். அதில் பலர் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் ஈ.எம்.ஐ-களில் சிக்கித் தவிக்கின்றனர்.
இன்னும் சிலர் தனக்கு என்ன செலவுகள் அதிகம். அதில் தேவையான செலவு எது, தேவையில்லாத செலவு எது என பார்த்து அதற்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்வார்கள். அப்படி உங்களுக்குப் படம் பார்க்க பிடிக்கும். அதற்கான செலவுகள் அதிகம் உங்களுக்கு ஏற்படுகிறது என்று கவலையா? இனி அது வேண்டாம்!
படம் பார்க்க இலவச டிக்கெட்கள், சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
எஸ்பிஐ கார்டு எலைட்
எஸ்பிஐ கார்டு எலைட் உங்களிடம் இருந்தால் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சினிமா டிக்கெட்களை இலவசமாகப் பெறலாம்.
பிவிஆர் கோடாக் கோல்டு கிரெடிட் கார்டு
பிவிஆர் கோடாக் கோல்டு கிரெடிட் கார்டு பயன்படுத்தி மாதம் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும் போது பிவிஆர் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் இலவசாக இடைக்கும். 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் 2 டிக்கெட் இலவசமாக கிடைக்கும். பிவிஆர் திரை அரங்குகளில் உணவு பொருட்கள் வாங்கும் போது 15 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.
ஆக்சிஸ் பாங்க் மை சோன் கிரெடிட் கார்டு
ஆக்சிஸ் பாங்க் மை சோன் கிரெடிட் கார்டு மூலம் பேடிஎம்-ல் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவம்சா கிடைக்கும். மாதத்திற்கு 200 ரூபாய் வரை தள்ளூபடி கிடைக்கும்.
ஐசிஐசிஐ கோரல் கிரெடிட் கார்டு
ஐசிஐசிஐ கோரல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி சினிமா டிக்கெட் புக் செய்யும் போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக கிடைக்கும். இப்படி மாத்திற்கு 2 டிக்கெட்கள் இலவசமாக கிடைக்கும்.
ஐசிஐசிஐ இன்ஸ்டா பிளாட்டினம் கிரெடிட் கார்டு
ஐசிஐசிஐ இன்ஸ்டா பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி புக் மை ஷோ தளத்தில் ஒவ்வொரு மாதமும் 2 டிக்கெட் புக் செய்யும் போது 100 ரூபாய் வரை ஆஃபர் கிடைக்கும். இந்த கார்டுக்கு ஆண்டு கட்டணம் என எதுவும் கிடையாது.
சிட்டி பாங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு
சிட்டி பாங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு பயன்படுத்தி புக் மை ஷோ தளத்தில் புக் செய்யும் எல்லா பட டிக்கெட்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.
ஆர்பிஎல் பிளாட்டினம் மேக்ஸிமா கிரெடிட் கார்டு
ஆர்பிஎல் பிளாட்டினம் மேக்ஸிமா கிரெடிட் கார்டு மூலம் புக் மை ஷோவில் சினிமா டிக்கெட் புக் செய்யும் போது 2 டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும்.
எச்டிஎப்சி பிளாட்டினம் டைம்ஸ் கார்டு
எச்டிஎப்சி பிளாட்டினம் டைம்ஸ் கார்டு மூலம் சினிமா டிக்கெட் புக் செய்ய ஆண்டுக்கு 1,800 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கியின் எக்ஸ்பிரஷன்ஸ் கிரெடிட் கார்டு
ஐசிஐசிஐ வங்கியின் எக்ஸ்பிரஷன்ஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி புக் மை ஷோ தளத்தில் ஒவ்வொரு மாதமும் 2 டிக்கெட் புக் செய்யும் போது 100 ரூபாய் வரை ஆஃபர் கிடைக்கும். இந்த கார்டுக்கு ஆண்டு கட்டணம் என எதுவும் கிடையாது.
கோடாக் டிஜிட்டல் பிளாட்டினம் கிரெடிட் கார்டு
கோடாக் டிஜிட்டல் பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், திரைப்பட டிக்கெட்களுக்கு 10 சதவீத கேஷ்பாக் கிடைக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications