உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் யார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் அதிகம் கொண்டாடப்படும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒன்று கிரிக்கெட், இந்தியாவில் கிரிக்கெட்-ஐ ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.

உலகளவில் கிரிக்கெட்-க்கு மட்டும் சுமார் 250 கோடி ரசிகர்கள் உள்ளனர் என்பதால் பல நிறுவனங்கள் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகளவிலான தொகை கொடுத்து விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று டாப் கிரிப்டோகரன்சிகளின் விலை நிலவரம் என்ன.. பிட்காயின் நிலை என்ன..! இன்று டாப் கிரிப்டோகரன்சிகளின் விலை நிலவரம் என்ன.. பிட்காயின் நிலை என்ன..!

அப்படி உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா..?!

சின்னத் தல ரெய்னா

சின்னத் தல ரெய்னா

ஆரம்பமே அசத்தல் சிஎஸ்கே அணியின் சின்னத் தல என்று எல்லோரும் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா குறைந்த காலகட்டத்திலேயே தனது அசாத்திய திறன் மூலம் 322 சர்வதேச போட்டியில் சுமார் 8000 ரன்களைக் குவித்தவர். தற்போது ஐபிஎல் போட்டிகளில் சீரியஸ் ஆக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா வருடத்திற்கு 22.34 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சின்னத் தல ரெய்னா 10வது இடத்தைப் பிடித்துள்ளார். இது 2021ஆம் ஆண்டுத் தரவுகள் அடிப்படையில் திரட்டப்பட்டது.

பேட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா

பேட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணியில் பலம், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் ஆஸ்திரேலியா அணியில் மட்டும் அல்லாமல் உலகளவிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உள்ளார், மேலும் கடந்த 2.5 வருடமாக ஐசிசி டெஸ்ட் பவுலிங் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பேட் கம்மின்ஸ் வருடத்திற்கு 22.40 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்று வருகிறார்.

சிங்கம் ஏபி டிவில்லியர்ஸ்

சிங்கம் ஏபி டிவில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏபி டிவில்லியர்ஸ் 3 வருடங்களுக்கு முன்பாகவே ஓய்வு பெற்றாலும், இவரின் இடத்தை நிரப்ப முடியாமல் இன்றளவும் தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது.

Mr.360 எனச் செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் வருடத்திற்கு 22.50 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

 ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா

ஜனவரி 2016ல் முதல் முறையாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடத் துவங்கிய ஜஸ்பிரித் பும்ரா, ஆரம்பம் முதல் தனது வேக பந்து மூலம் பேட்ஸ்மேனை திணறடித்து வருகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா வெஸ்ட் இன்டிஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் எடுத்தது இன்றளவும் முக்கியச் சாதனையாக உள்ளது.

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடிக்கும் ஜஸ்பிரித் பும்ரா வருடத்திற்கு 31.65 கோடி ரூபாய் அளவில் சம்பாதித்து வருகிறார்.

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியில் ஆரம்பத்தில் லெக் ஸ்பின்னராக இருந்த ஸ்டீவ் ஸ்மித், அடுத்த ஷேன் வார்ன் என அழைக்கப்பட்ட போது தான் அடுத்த ரிக்கி பாண்டிங் என அனைவருக்கும் காண்பித்தவர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகம் கொண்டாடப்பட்ட ஒருவர் என்றால் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான். இவர் வருடத்திற்கு 55.86 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறார்.

 ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

2016ல் இந்திய அணியில் சேர்ந்த ஹர்திக் பாண்டியா, பாஸ்ட் பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் தேவையை எளிதாகப் பூர்த்திச் செய்தவர். மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே இவரது திறன் வியக்கவைக்கும் அளவிற்கு உயர்ந்தது.

பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் பட்டையைக் கிளப்பும் ஹர்திக் பாண்டியா வருடத்திற்கு 59.59 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியில் ஸ்டார் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வருடத்திற்கு 60 கோடி ரூபாய் வருமானத்துடன் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்திய அணியில் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா, அணியில் சிறந்த ஒப்பனர். இந்திய அணியில் 2013 முதல் விளையாடிக்கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா வருடத்திற்கு 74.49 கோடி ரூபாய் சம்பாதித்து டாப் 10 பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து மகேந்திர சிங் தோனி 2019லேயே வெளியேறினாலும் மக்கள் மனத்திலிருந்து இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். மகேந்திர சிங் தோனியின் சாதனைகளும் அவரது குணமும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் வியந்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணி மூலம் தமிழ்நாட்டு மக்களுடன் எப்போதும் இணைந்திருக்கும் தோனி, விளம்பரம் மற்றும் பல்வேறு வர்த்தகம் மூலம் வருடத்திற்குச் சுமார் 108.28 கோடி ரூபாய் சம்பாதித்து டாப் 10 பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

விராட் கோலி - கேப்டன்

விராட் கோலி - கேப்டன்

மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்பி வரும் விராட் கோலி, அணி நிர்வாகம், திட்டமிடல், பேட்டிங் என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறார். 2008 முதல் இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி தனக்கான இடத்தைப் போராடித் தான் பெற்றார்.

அந்தப் போராட்டத்தின் வெற்றியைத் தான் தற்போது அறுவடை செய்து வருகிறார் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி.

மகேந்திர சிங் தோனி-யை போலவே விளையாட்டில் மட்டும் அல்லாமல் விளம்பரம், வர்த்தகம் எனப் பலவற்றில் சம்பாதித்து வருகிறார் விராட் கோலி. வருடத்திற்கு 208.56 கோடி ரூபாய் சம்பாதிக்கும் விராட் கோலி உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் ஆக உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Highest Paid Cricketers 2021

Top 10 Highest Paid Cricketers 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X