இந்தியாவில் அதிகப் பணக்காரர்களை உருவாக்கி தள்ளும் துறை "இது"தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தாலும் இந்தியாவில் எப்போதும் சில துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது. இந்த அதீத வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான பணக்காரர்கள் உருவாகி வருகின்றனர்.

 

இந்தியாவில் ஒரு சில துறைகள் மட்டும் அதிகப் பணக்காரர்களை உருவாக்கி அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரு துறை சிறப்பான வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்திச் செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தைக்கும் சேவை அல்லது சரக்கை ஏற்றுமதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும். அந்த வகையில் இத்துறை பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் போது அத்துறை சார்ந்த தொழிலதிபர்கள் பணக்காரர்களாக உயருவார்கள்.

சமீபத்தில் ஹூரன் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலின் படி இந்தியாவில் அதிகப் பணக்காரர்களை உருவாக்கிய துறை எது தெரியுமா..?

பார்மா

பார்மா

இந்திய பார்மா துறை இதுவரை நாட்டில் சுமார் 137 பில்லியனர்களை உருவாக்கியுள்ளது இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இத்துறையில் பூன்வாலா தான் மிகப்பெரிய பணக்காரர்களாக உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 88,800 கோடி ரூபாய்.

உலகின் மொத்த மருந்த தேவையை இந்தியா சுமார் 50 சதவீத பூர்த்தி செய்கிறது. இதேபோல் பொது மருந்து பிரிவில் இந்தியா நிறுவனங்கள், அமெரிக்காவின் 40 சதவீத சேவையைப் பூர்த்தி செய்கிறது.

 

மென்பொருள் மற்றும் சேவைகள்

மென்பொருள் மற்றும் சேவைகள்

இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் பிரிவு மட்டும் சுமாப் 73 பில்லியனர்களை உருவாக்கி 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இத்துறையின் மிகப்பெரிய பணக்காரர் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி இவரின் மொத்த சொத்து மதிப்பு 1,17,100 கோடி ரூபாயாகும்.

இந்தியாவில் உருவான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகிய பல தற்போது பல உலக நாடுகளில் கொடிக்கட்டி பறக்கிறது என்றால் மிகையில்லை.

 

நுகர்வோர் துறை
 

நுகர்வோர் துறை

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் காரணத்தால் ஒரு மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

இத்துறை இந்தியாவில் மட்டும் சுமார் 59 பில்லியனர்களை உருவாக்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இத்துறையில் நுசில் வாடியா மற்றும் குடும்பம் தான் மிகப்பெரிய பணக்காரர் ஆக உள்ளனர், இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 42,200 கோடி ரூபாய்.

 

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

4வது இடத்தில் 57 பில்லியனர்களை உருவாக்கி கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை உள்ளது, 5வது இடத்தில் 45 பில்லியனர்களை உருவாக்கி ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் துறை உள்ளது, 6வது இடத்தில் 45 பில்லியனர்களை உருவாக்கி கட்டுமான மற்றும் இன்ஜினியரிங் துறையும், 7வது இடத்தில் 43 பில்லியனர்களுடன் நிதி சேவை துறையும், 8வது இடத்தில் 39 பில்லியனர்களுடன் உணவு மற்றும் குளிர்பான துறையும், 9வது இடத்தில் 36 பில்லியனர்களுடன் டெக்ஸ்டைல் துறையும், 10 இடத்தில் 33 பில்லியனர்கள் உடன் ரியல் எஸ்டேட் துறையும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 industries in india with most billionaires

Quite many industry segments in India are doing very well in India producing billionaires. Making a positive impact on the Indian economy by catering to the needs of both the domestic market and exports, several industry segments are outperforming the others. Here are the top 10 industry segments in the country that have produced the maximum number of billionaires.
Story first published: Monday, March 9, 2020, 15:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X