உலகின் காஸ்ட்லி நகரம் எது.. ரொம்ப மலிவான நகரம் எது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் விலைவாசி அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் மட்டும் அல்ல, நியூ யார்க் நகரமும் முதலிடத்தில் உள்ளது.

 

எக்னாமிக் இண்டலிஜென்ஸ் யூனிட்டின் வருடாந்திர கணக்கெடுப்பின் படி, 2022ம் ஆண்டில் உலகின் விலையுயர்ந்த நகரங்கள் குறித்தான பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த டெல் அவிவ் இந்த ஆண்டு மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

8 முறை முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

8 முறை முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சிட்னி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது, ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் ஆகியவை தரவரிசையில் 88 இடங்கள் வரை உயர்ந்தன. இதேபோல சிங்கப்பூர் கடந்த 10 ஆண்டுகளில் 8 முரை முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா - உக்ரைனால் பிரச்சனை

ரஷ்யா - உக்ரைனால் பிரச்சனை

கொரோனாவை தொடர்ந்து நிலவிய பொருளாதார மந்த நிலை, தற்போது அதனை தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பலவும் தொடர்ந்து சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க பணவீக்கம் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது. இது மேற்கோண்டு பிரச்சனையாக மாறியுள்ளது, இது உலகம் முழுக்க விலைவாசியை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது மக்களின் வாழ்வாதார செலவை கூட்டியுள்ளது.

காஸ்ட்லி நகரங்கள்
 

காஸ்ட்லி நகரங்கள்

இது மக்களின் வாழ்க்கை செலவினங்களை இன்னும் அதிகரித்துள்ளது. எனினும் இந்த காலகட்டத்திலும் அதிக செலவினம் உள்ள் நகரங்கள் எது வாருங்கள் பார்க்கலாம்.

1. சிங்கப்பூர் -சிங்கப்பூர்

1. நியூயார்க் - அமெரிக்கா

3. டெல் அவிவ்- இஸ்ரேல்

4. ஹாங்காங்- ஹாங்காங்

4.லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா

6.ஜுரிச் - சுவிட்சர்லாந்து

7.ஜெனிவா - சுவிட்சர்லாந்து

8.சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்கா

9.பாரிஸ் - பிரான்ஸ்

10.கோபெஹன் - டென்மார்க்

10.சிட்னி - ஆஸ்திரேலியா

எப்படி இந்த பட்டியல்?

எப்படி இந்த பட்டியல்?

உலகின் 172 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், அங்குள்ள 200 வகையான பொருட்கள் விலை, மக்களின் வாழ்வாதாரம், வாழ்வாதாரச் செலவு மற்றும் சேவைகள் என பலவற்றை ஆய்வு செய்து, இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மலிவான நகரம் எது?

மலிவான நகரம் எது?

நியூயார்க் நகரம் முதல் முறையாக இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 6வது இடத்தில் இருந்தது.

இதே மலிவான நகரப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிரியாவை சேர்ந்த டாமஸ்கஸ் ஆகும். இது தவிர லிபியாவின் ட்ரைபோலி முக்கிய இடம் பெற்றுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ ஏற்றம்

சான் பிரான்சிஸ்கோ ஏற்றம்

இந்த விலையுயர்ந்த பட்டியலில் சான் பிரான்சிஸ்கோ 24வது இடத்தில் இருந்து, 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோ மற்றும் ஒசாகா நகரங்கள் 24 மற்றும் 33வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இது குறைந்த வட்டி விகிதம் காரணமாக தள்ளப்பட்டுள்ளன.

மலிவான நகரங்கள்

மலிவான நகரங்கள்

கடந்த ஆண்டு மலிவான நகரங்கள் பட்டியலில்

சிரியா - டமாஸ்கஸ்
லிபியாவின் திரிப்பொலி
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்
துனிசியா நாட்டின் துனிஷ்
கஜகஸ்தானின் அல்மாட்டி
பாகிஸ்தானி கராச்சி
இந்தியாவின் அகமதாபாத்
அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ்
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ்
ஜாம்பியாவின் -லுசாக்கா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10
English summary

Top 10 most expensive countries to live 2022

Singapore tops the list of most expensive cities in the world. Not only Singapore, New York City is also at the top. Topping the same list of cheapest cities is Damascus in Syria
Story first published: Sunday, December 4, 2022, 22:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X