டாப் 8 நகரங்களில் 76% சரிவு.. வீடு விற்பனையில் படு வீழ்ச்சி.. சென்னையில் ரொம்ப மோசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதும் கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பலரும் கடந்த சில மாதங்களாகவே அடிப்படை வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

குறிப்பாக இரண்டாம் கட்ட அலையின் போது பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்தனர். வாழ்வாதாரத்தினையும் இழந்து தவித்தனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் அன்பானவர்களை, பலரும் இழந்தனர்.

இதற்கிடையில் அத்தியாவசியம் தவிர, மற்ற துறைகள் பெரும் சரிவினைக் கண்டன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் மக்கள் கொரோனா காலகட்டத்தில் அடிப்படை வாழ்வாதாரம் தவிர, மற்றவற்றில் முதலீடு செய்ய பயந்தனர்.

சொந்த வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான நிலவரம்..!

வட்டி விகிதம் சரிவு

வட்டி விகிதம் சரிவு

மேலும் இந்த கொரோனா இன்னும் எந்த மாதிரியான மாற்றங்களை எல்லாம் கொண்டு வரப்போகின்றதோ? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதிலும் தற்போது இந்தியாவில் வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் மிக குறைவாக உள்ளன.

வீடு விற்பனை சரிவு

வீடு விற்பனை சரிவு

இன்னும் சில வங்கிகள் வீட்டுக் கடனுக்காக பல சலுகைகளையும் அவ்வப்போது வாரி வழங்கி வருகின்றன. இதற்கும் மத்தியில் வீடு விற்பனையாளர்களும் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சில சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். இப்படி பல்வேறு சலுகைகளுக்கு மத்தியிலும் வீடு விற்பனையானது மோசமான சரிவினைக் கண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

முக்கிய நகரங்களில் சரிவு
 

முக்கிய நகரங்களில் சரிவு

இது குறிப்பாக சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைத்ராபாத், அகமதாபாத், டெல்லி என்சிஆர், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது குறித்து ஹவுசிங் புரோக்கரேஜ் நிறுவனமான புரோப்டைகர் நடத்திய ஆய்வில், மேற்கண்ட 8 நகரங்களில், கடந்த ஜூன் காலாண்டில் 76% வீடு விற்பனை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டெல்லி & சென்னை

டெல்லி & சென்னை

டெல்லி என்.சி.ஆரில் முந்தைய காலாண்டில் 6,188 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ஜூன் காலாண்டில் 2,828 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதே சென்னையில் ஜூன் காலாண்டில் வெறும் 709 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே மார்ச் காலாண்டில் 4,468 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹைத்ராபாத் & கொல்கத்தா

ஹைத்ராபாத் & கொல்கத்தா

ஹைத்ராபாத்தில்முந்தைய காலாண்டில் 7,721 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ஜூன் காலாண்டில் வெறும் 2,429 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதே கொல்கத்தாவில் ஜூன் காலாண்டில் வெறும் 1,253 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே மார்ச் காலாண்டில் 3,382 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புனே & எம்.எம்.ஆர்

புனே & எம்.எம்.ஆர்

புனேவில் ஜூன் காலாண்டில் வெறும் 3,381 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே மார்ச் காலாண்டில் இங்கு 18,574 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இதே எம்.எம்.ஆர்-ல் ஜூன் காலாண்டில் வெறும் 2,495 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே மார்ச் காலாண்டில் இங்கு 13,725 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 8 cities housing sales drop 76% in june quarter; record drop in Chennai

Real estate latest updates.. Leading Housing brokerage firm PropTiger reported that top 8 cities see housing sales drop 76% in june quarter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X