உயர் அதிகாரிகளைப் பதம் பார்த்த 2022.. அடுத்தடுத்து ராஜினாமா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஆம் ஆண்டு துவங்கும் போது பெரும் நம்பிக்கை உடன் உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் தனது வளர்ச்சிப் பாதையில் காலடி வைத்தாலும், சில வாரத்திலேயே மொத்தமும் தலைகீழாக மாறத் துவங்கியது.

 

ரஷ்யா - உக்ரைன் போர், வர்த்தகத் தடைகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்கம் அதிகரிப்பு, தொடர்ந்து மத்திய வங்கிகள் வட்டி விகித உயர்வு, ரெசிஷன் அச்சம், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சரிவு எனப் பல தடுமாற்றங்கள் சர்வதேச நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்தது.

இந்த நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளையும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாக்கியது.

சோமேட்டோ

சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மோஹித் குப்தா 4.5 வருடம் பணியாற்றிய பின்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சோமேட்டோவின் புதிய முன்முயற்சிகள் பிரிவின் தலைவரும் முன்னாள் உணவு விநியோகத் தலைவருமான ராகுல் கஞ்சூ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சோமேட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவை பிரிவின் தலைவரான சித்தார்த் ஜாவர் ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்தார். இந்த 3 பேரும் நவம்பர் மாதம் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

கேப்

கேப்

ஜூலை மாதம், ஆடை நிறுவனமான கேப் தனது தலைமை நிர்வாக அதிகாரி சோனியா சிங்கால் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. சோனியா சிங்கால் 2 ஆண்டுகள் மட்டுமே கேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

Peloton
 

Peloton

பிப்ரவரி மாதம் பெலோட்டன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் ஃபோலே, தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பின் இந்நிறுவனத்தின் வர்த்தகம் தடாலடியாகச் சரிந்தது. இந்தச் சரிவை சமாளிக்க முடியாமல் வெளியேறினார்.

CNN

CNN

சிஎன்என் தலைவர் ஜெஃப் ஜூக்கர் பிப்ரவரி மாதம் நீண்ட காலப் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்தார், நெட்வொர்க் நிர்வாகியுடனான காதல் உறவை நிர்வாகத்திடம் தெரிவிக்கத் தவறியதால் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. ஜெஃப் ஜூக்கர் 2013 முதல் CNN இல் இருந்தார்.

பேஸ்புக்

பேஸ்புக்

ஷெரில் சாண்ட்பெர்க் ஜூன் மாத தொடக்கத்தில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா -வின் சிஓஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மெட்டா குழுமத்தில் சுமார் 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.

அன்டர் ஆர்மர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் ஃபிரிஸ்க் இரண்டு வருடங்களாகப் போராடி வந்த நிலையில் மே மாதம் இப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

ஹோவர்ட் ஷூல்ட்ஸ் மூன்றாவது மற்றும் கடைசி முறையாக அக்டோபர் 1 அன்று ஸ்டார்பக்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுகிறார். ஷூல்ட்ஸ் 1982 இல் ஸ்டார்பக்ஸில் பணிபுரியத் தொடங்கினார். இவருடைய பதவியில் இந்தியரான லக்ஷ்மன் நரசிம்மன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

Bed Bath & Beyond

Bed Bath & Beyond

இந்நிறுவனத்தின் வர்த்தகம் சரிந்த நிலையில் சிஇஓ-வாக இருந்த நிலையில் மார்க் ட்ரிட்டன் பதவி விலகினார்.

அடிடாஸ்

அடிடாஸ்

அடிடாஸ் சிஇஓ Kasper Rorsted 2023 இல் பணி ஒப்பந்தம் முடிவதற்குள் தனது பதவியை விட்டு விலகுவார் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2016 முதல் அடிடாஸின் தலைவராக ரோர்ஸ்டெட் இருந்து வருகிறார்.

Pinterest

Pinterest

ஜூன் மாதம் Pinterest இணை நிறுவனர் பென் சில்பர்மேன் சிஇஓ பதவியில் இருந்து நிர்வாகத் தலைவராக மாறினார், இவருடைய பதவியில் முன்னாள் கூகுள் மற்றும் வென்மோ சிஇஓ ஆன பில் ரெடி நியமிக்கப்பட்டார்.

Shell

Shell

உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ஷெல் அதன் சிஇஓ பென் வான் பியூர்டன் இந்த ஆண்டின் இறுதியில் பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டது.

Reckitt Benckiser

Reckitt Benckiser

பிரிட்டிஷ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான Reckitt Benckiser, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் CEO லக்ஷ்மன் நரசிம்மன் பதவி விலகுவதாக அறிவித்தது.

கார்லைல் குழுமம்

கார்லைல் குழுமம்

ஆகஸ்ட் மாதம், தனியார் பங்கு நிறுவனமான கார்லைல் குழுமத்தின் CEO பதவியில் இருந்து Kewsong Lee திடீரென விலகினார். Kewsong Lee தனது ஐந்தாண்டு ஒப்பந்தம் முடிவதற்குள் வெளியேறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top CEO's resign on 2022; Not only employees, CXO leads also affected in layoff

Top CEO's resign on 2022; Not only employees, CXO leads also affected in layoff
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X