இந்தியாவில் பணிபுரிய சிறந்த நிறுவனங்கள் என்னென்ன.. சென்னையில் இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணிபுரியும் ஊழியர்கள் குடும்பத்தினரை அடுத்து அதிக நேரம் இருப்பது அலுவலகத்தில் தான். சொல்லப்போனால் அது தான் ஊழியர்களின் இரண்டாவது குடும்பம் எனலாம்.

அந்த வகையில் இந்தியாவில் பணிபுரிய சிறந்த நிறுவனங்கள் என்ன? ஏன்? அதில் எத்தனை நிறுவனங்கள் சென்னையில் உள்ளன? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இது குறித்து லிங்க்ட் இன் சமீபத்திய ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 25 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெரும்பாலும் ஐடி நிறுவனங்களே இடம் பெற்றுள்ளன.

கர்நாடகாவிற்கு 2வது ஜாக்பாட்.. அப்போ தமிழ்நாட்டுக்கு..?! கர்நாடகாவிற்கு 2வது ஜாக்பாட்.. அப்போ தமிழ்நாட்டுக்கு..?!

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

லிஸ்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் இளம் திறமைகளுக்கு வாய்ப்பு. ஊழியர்களின் திறமையை மேம்படுத்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல், பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பது போன்ற பல சிறப்பான கொள்கைகளை வைத்துள்ளன. இதன் மூலம் மேற்கண்ட நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பினை உருவாக்குகின்றன. திறனை வளர்க்கின்றன. நிலவி வரும் நெருக்கடியான நிலையிலும் கூட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றன.

டிசிஎஸ்

டிசிஎஸ்

 

இதில் முதலாவது இடத்தில் உள்ளது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) தான். இந்த நிறுவனம் சர்வதேச அளவில் 5,56,000 ஊழியர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ளது. மற்ற நிறுவனங்களை போல இந்த நிறுவனமும் ஊழியர்கள் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டது. எனினும் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த அட்ரிஷன் விகிதத்தினை கொண்டுள்ளது.2 லட்சம் பெண்களை கொண்டுள்ள நிறுவனம், கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2021க்கு இடையில் 1,10,000 பேருக்கு பதவி உயர்வு அளித்துள்ளது. 2030க்குள் 50 பில்லியன் டாலர் வருவாயினை பெறும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

அசெஞ்சர்
 

அசெஞ்சர்

இந்த ஆய்வில் இரண்டாவது இடம் பிடித்துள்ள நிறுவனம் அசெஞ்சர். இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6,74,000 பேர். இது பெங்களூர், மும்பை மற்றும் ஹைத்ரபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. இந்த நிறுவனத்திலும் 45% பெண் ஊழியர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு இன்னும் எளிதாக பணிபுரியும் சூழலை உருவாக்கம் கோயம்புத்தூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற அடுக்கு 2 நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றது. இதன் வளர்ச்சி விகிதமானது இரு இலக்கில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில்ம் எதிர்கால வளர்ச்சி குறித்தான கணிப்புகளும் வலுவாக காணப்படுகின்றது.

காக்னிசண்ட்

காக்னிசண்ட்

காக்னிசண்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,30,600. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 2,39,955 பேர். இந்த நிறுவனமும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைத்ரபாத் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. அட்ரிஷன் விகிதம் மிக அதிகமாக உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் 2022ம் ஆண்டில் 50000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது பதவி உயர்வும், அதிக சம்பள உயர்வு, ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பலவற்றின் மூலம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.இதற்கிடையில் கடந்த 2021ம் ஆண்டில் கடைசி காலாண்டில் நிறுவனம் இரு இலக்கில் வளர்ச்சியினை கண்டுள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 2,92,070 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 2,31,690 பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனமும் பெங்களூரு, சென்னை, ஹைத்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இது தொடர்ந்து கிளவுட் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் மூலம் வலுவான வளர்ச்சியினையும் பதிவு செய்து வருகின்றது. இது 100 பில்லியன் டாலர் மதிப்பினை தொட்ட 4 மிகப்பெரி சந்தை மூலதனத்தினை கொண்ட நிறுவனமாக உள்ளது. நிலவி வரும் ஊழியர் பற்றாக்குறைக்கு மத்தியில் அதிகளவில் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே 55,000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்தியது.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

கேப்ஜெமினி நிறுவனம் சர்வதேச அளவில் 3,24,700 ஊழியர்களை கொண்டுள்ளது. இதில் 1,50,000 பேர் இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் பெங்களூரு, மும்பை, ஹைத்ராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ளது. கேப்ஜெமினியில் மொத்த ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேர் இந்தியர்கள். இந்த நிறுவனம் இந்த ஆண்டில் இந்தியாவில் 60,000-க்கும் மேற்பட்ட புதிய பணியார்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தில் 2,49,265 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் முக்கியமாக பெங்களூரு, ஹைத்ரபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இது 2023ம் நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 17,500 பேராக இருந்தது. இது சமீபத்தில் அமெரிக்காவினை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தினை கையகடுப்படுத்தியது. தற்போது விப்ரோ நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது.

ஐபிஎம்

ஐபிஎம்

7வது இடத்தில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் மொத்தம் 2,82,100 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த நிறுவனம் முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைத்ராபாத். டெல்லி உள்ளிட்ட முக்கிய பங்குகளில் செயல்பட்டு வருகின்றது. சென்னையிலும் இதன் செயல்பாடு உள்ளது. நடப்பு ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியினை இலக்காக கொண்ட இந்த நிறுவனம், கடந்த ஏப்ரல் 2020ல் இருந்து 20 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. டொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் இந்த நிறுவனம் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் விரிவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

ஹெச்சிஎல்

ஹெச்சிஎல்

எட்டாவது இடத்தில் ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 1,97,780 ஊழியர்களை கொண்டுள்ளது. இது சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தலை கடந்த ஆண்டினை காட்டிலும் இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது 2022ல் 22,000 பேராக இருந்த எண்ணிக்கையை 2023ம் நிதியாண்டில் 40,000 - 45000 பேராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் இதன் வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இரண்டு 5ஜி அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்தியது.

லார்சன் & டூப்ரோ

லார்சன் & டூப்ரோ

எல் & டி நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது 52,040 பேராகும். இதில் இந்தியாவில் மட்டும் 48,245 பேராகும். இந்த நிறுவனமும் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.பல நிறுவனங்களும் பிரெஷ்ஷர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், எல் & டி இத்துறைக்கு தேவையான திறமைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றது. நிறுவனம் கடந்த ஆண்டு ஆப் அடிப்படையிலான கற்றல் பிளாட்பார்மினை அறிமுகப்படுத்தியது.

டெலாய்ட்

டெலாய்ட்

டெலாய் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது 3,45,000 பேராகும். இதில் இந்தியாவில் 15,000 பேரைக் கொண்டுள்ளது.மொத்த ஊழியர்களில் கிட்டதட்ட 15% ஊழியர்கள் இந்தியாவில் தான் பணிபுரிகின்றனர். இது இந்தியாவில் ஹைத்ராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ளது. நிறுவனம் ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் விதமா டயர் 3 மற்றும் டயர் 3 நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. வேலை தேடுபவர்களை Be purposeful, distinctive, and outcome-oriented இருங்கள் என கூறுகின்றது.

ஐடி அல்லாத நிறுவனங்கள்

ஐடி அல்லாத நிறுவனங்கள்

இதில் ஐடி அல்லாத நிறுவனங்களான ICICI வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, போஷ், ஆர்ம், பப்ளிசிஸ் குரூப், இஓய், ஆதித்யா பிர்லா குரூப், டெக் மகேந்திரா, ஆரக்கிள், டெல் டெக்னாலஜி, அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், ஜேபி மார்கன் சேஸ் & கோ, பிளிப்கார்ட்,ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் சென்னையிலும் இயங்கி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top companies to work for in India? Operates in Chennai?

What are the best companies to work for in India? Which companies are operating in Chennai?
Story first published: Wednesday, May 18, 2022, 19:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X