வேலைவாய்ப்பின்மை சரிவு.. வர்த்தகப் பற்றாக்குறை உயர்வு.. இந்தியாவின் நிலை இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது. முதல் அலையில் இருந்து மீண்டு வந்த போது 2வது அலையில் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டது.

2வது அலை பாதிப்புகளை மெல்ல மெல்லக் கடந்து வரும் வேளையில், ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேளையில் மத்திய அரசு இன்று பல முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ளது

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் செய்த ஆய்வில் இந்தியாவில் 15 வயதுக்கு மேல் இருக்கும் மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அளவு ஏப்ரல் - ஜூன் 2021 காலகட்டத்தில் 12.6 சதவீதமாக இருந்துள்ளது. இதைக் காலகட்டத்தில் முந்தைய ஆண்டில் 20.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி - மார்ச் 2021 காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 9.3 சதவீதமாக இருந்துள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அளவுகள் 25.1 சதவீதம் அதிகரித்து 34.57 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதேவேளையில் இந்தியாவின் இறக்குமதி 36 சதவீதம் அதிகரித்து 55.45 பில்லியன் டாலராக உள்ளது. இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் 69 சதவீதம் அதிகரித்து 15.28 பில்லியன் டாலராக உள்ளது.

இந்நிலையில் இன்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் வர்த்தகப் பற்றாக்குறை 20.88 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மொத்த விலை பணவீக்கம்

மொத்த விலை பணவீக்கம்

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிப்ரவரி மாதம் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாதம் 12.96 சதவீதமாகவும், டிசம்பர் 2021ல் 13.56 சதவீதமாகவும் இருந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்க எண்ணெய், உலோகம், கெமிக்கல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவு பொருட்களின் விலையில் ஏற்பட்ட விலை உயர்வு தான் மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளது.

சமையல் எண்ணெய் இறக்குமதி

சமையல் எண்ணெய் இறக்குமதி

பிப்ரவரி மாதம் இந்தியாவில் edible oil இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்து 9,83,608 டன்னாக உயர்ந்துள்ளது. இந்தப் பிப்ரவரி மாதம் இந்தியா அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாக SEA அமைப்பு (Solvent Extractors' Association of India) இன்று தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் edible oil இறக்குமதி அளவு 7,96,568 டன்னாக உள்ளது.

மேலும் மொத்த vegetable oils இறக்குமதி 2021 பிப்ரவரி மாதத்தில் 8,38,607 டன்னாக இருந்த நிலையில், 2022 பிப்ரவரி மாதத்தில் 10,19,997 டன்னாக உயர்ந்துள்ளது என SEA அமைப்பு தெரிவித்துள்ளது.

வாட் வரி

வாட் வரி

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ராஜ்யசபாவில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

மேலும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பல நாடுகளில் எரிபொருள் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, ஆனால் கொரோனா தொற்று காலத்தின் போது இந்தியாவில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பில் வங்கி அல்லாத சிறு நிதி நிறுவனங்களின் (NBFC-MFI) கடனுக்கான வட்டி விகித கட்டுப்பாட்டை (Ceiling) மொத்தமாக நீக்கியுள்ளது.

மேலும் வங்கி, ஸ்மால் பைனான்ஸ் வங்கி, NBFC, லாபமற்ற நிறுவனங்கள் உடன் வங்கி அல்லாத சிறு நிதி நிறுவனங்களையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் அனைத்து நிதி அமைப்புகளும் ஓரே கட்டமைப்பு மற்றும் கண்காணிப்புக்குள் வைக்க முடியும்.

ரிசர்வ் வங்கி பிணையமில்லாத கடனுக்கான குடும்ப ஆண்டு வருமான அளவீட்டை ரூ.3 லட்சமாக உயர்த்தி மைக்ரோபைனான்ஸ் கடனாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை இக்கடனுக்குக் கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.1.25 லட்சமும், நகர்ப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் ரூ.2 லட்சம் என நிர்ணயம் செய்து கடன் வழங்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Headlines: Unemployment rate at 12.6%, Trade deficit widens, RBI removes lending rate cap on NBFC-MFI

Top Headlines: Unemployment rate at 12.6%, Trade deficit widens, RBI removes lending rate cap on NBFC-MFI வேலைவாய்ப்பின்மை சரிவு.. வர்த்தகப் பற்றாக்குறை உயர்வு.. இந்தியாவின் நிலை இதுதான்..!
Story first published: Monday, March 14, 2022, 20:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X