அதானி கிரீன் பங்குகளை விற்க தயாரான டோட்டல் எனர்ஜிஸ்.. முதலீட்டாளர்களே கவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அள்ளிக்கொடுத்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி குழும பங்குகள் வேகமாக வளர்ச்சி அடைந்த நிலையில் கௌதம் அதானி சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி தற்போது உலகளாவிய பொருளாதார மந்தநிலையாலும், அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையாலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர் ஆக விளங்கும் டோட்டல்எனர்ஜிஸ் அதன் பங்கு இருப்பைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

'No-poaching pact' ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கும் அம்பானி, அதானி.. ஊழியர்கள் அதிர்ச்சி! 'No-poaching pact' ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கும் அம்பானி, அதானி.. ஊழியர்கள் அதிர்ச்சி!

டோட்டல் எனர்ஜிஸ்

டோட்டல் எனர்ஜிஸ்

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய எனர்ஜி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், 2021ல் அதானி கிரீன் எனர்ஜிஸ் நிறுவனத்தில் சுமார் 20 சதவீத பங்குகளைச் சுமார் 2 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியது. இந்தக் கைப்பற்றலுக்குப் பின் அதானி குழும நிறுவனத்தில் பல்வேறு வர்த்தகத்தில் டோட்டல் எனர்ஜிஸ் பங்கீடும், டீல்களும் அடங்கும்.

அதானி கிரீன் எனர்ஜி

அதானி கிரீன் எனர்ஜி

டோட்டல் எனர்ஜிஸ் வைத்திருக்கும் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த 20 சதவீத அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியுள்ளது. இதனால் இந்த வளர்ச்சியை லாபமாக்கும் முயற்சியில் டோட்டல் எனர்ஜிஸ் இறங்கியுள்ளது.

முதலீடு - பணம்
 

முதலீடு - பணம்

டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான Patrick Pouyanne முதலீட்டாளர்கள் மத்தியிலான ஆலோசனைக் கூட்டத்தில் முதலீட்டின் மதிப்பு வளர்ந்தால் பணமாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது பொருள் எனத் தெரிவித்தார்.

2 பில்லியன் டாலர்

2 பில்லியன் டாலர்

இதேபோல் Patrick Pouyanne தற்போது அதானி கிரீன் எனர்ஜி பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் இல்லை, அப்படி விற்பனை செய்தாலும் சிறிய அளவிலான பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அதிகப்படியான முதலீடு செய்யப்பட்ட 2 பில்லியன் டாலர் தொகையில் சிறிய அளவை திரும்ப எடுக்க முயற்சிக்கப்படும்.

54 சதவீதம் வளர்ச்சி

54 சதவீதம் வளர்ச்சி

அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 2022ல் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் இதேவேளையில் சென்செக்ஸ் குறியீடு 1.8 சதவீதம் சரிவை சந்தித்து. மேலும் இந்த மாதம் அதிகப்படியான கடன் குறித்த விமர்சனத்தால் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 15 சதவீதம் சரிந்துள்ளது.

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ்

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ்

மேலும் டோட்டல் எனர்ஜீஸ் ஜூன் மாதம் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தில் சுமார் 25 சதவீத பங்குகளை அறிவிக்கப்படாத தொகைக்குக் கைப்பற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TotalEnergies may sell small Adani Green stake to recoup some initial investment

TotalEnergies may sell a small Adani Green stake to recoup some initial investment of 2 billion dollars of a 20 percent stake
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X