வோடபோன் சேவை வேண்டாம் என வெளியேறிய லட்சக்கணக்கான வாடிக்கையாளார்கள்..எதிர்காலம் என்னவாகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் சமீபத்திய ஆண்டுகளாகவே கடும் போட்டியானது நிலவி வருகின்றது. குறிப்பாக ஜியோவின் வருகைக்கு பிறகு பல நிறுவனங்கள் காணமல் போய்விட்டன.

 

எனினும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா, பி எஸ் என் எல், ஜியோ என சில நிறுவனங்கள் மட்டுமே களத்தில் உள்ளன.

கடந்த அக்டோபரில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த அக்டோபரில் 117 கோடியாக குறைந்துள்ளது.

16 இந்திய பார்மா நிறுவனங்கள் தடை.. நேபாள அரசு அதிரடி உத்தரவு..!! 16 இந்திய பார்மா நிறுவனங்கள் தடை.. நேபாள அரசு அதிரடி உத்தரவு..!!

35 லட்சம் பேர் வெளியேற்றம்

35 லட்சம் பேர் வெளியேற்றம்

அதிலும் வோடபோன் ஐடியா நிறுவனத்திலிருந்து லட்சக்கணக்கான வாடிக்கையாளார்கள் வெளியேறியுள்ளனர். இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய், இது குறித்து தெரிவித்துள்ள அறிக்கையில், கடந்த அக்டோபரில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக சரிவினைக் கண்டுள்ளது. இம்மாதத்தில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து, கிட்டதட்ட 35 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல்

பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல்

பி எஸ் என் எல் நிறுவனமும் 5.19 லட்சம் வாடிக்கையாளர்களை இம்மாதத்தில் இழந்துள்ளது. இதே காலகட்டத்தில் எம் டி என் எல் நிறுவன மொபைல் இணைப்பில் இருந்து, 3591 வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் இரண்டு நிறுவனங்களில் மட்டுமே அக்டோபரில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்துள்ளனர். இவ்விரண்டு நிறுவனங்களும் சேர்ந்து மொத்தம் 22.1 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளன.

இத்தனை லட்சம் பேரா?
 

இத்தனை லட்சம் பேரா?

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்ந்து ஆபரேட்டரான வோடபோன் ஐடியா அக்டோபர் 2022ல் சுமார் பல லட்சம் பேரை இழந்துள்ளது. வோடபோன் ஐடியாவின் செப்டம்பரில் 21.75% ஆக இருந்து, அக்டோபரில் 21.48% ஆக குறைந்துள்ளது. வோடபோன் நிறுவனம் கடந்த செப்டம்பர் 2022ல் 4 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்தது. இரண்டு மாதங்களில் மட்டும் வாடிக்கையாளார்களின் எண்ணிக்கையை 7.5 மில்லியன் குறைந்துள்ளது.

ஏர்டெல் & ஜியோ

ஏர்டெல் & ஜியோ

இதே ஏர்டெல் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் வயர்லெஸ் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் 8 மில்லியன் பயனர்களை இணைத்துள்ளது. இதே ஜியோ 1.4 மில்லியன் பயனர்களை இணைத்துள்ளது. இவ்விரு நிறுவனங்களின் சந்தை பங்கானது 36.85% மற்றும் 31.92% ஆக அக்டோபர் 2022ல் அதிகரித்துள்ளது.

செயலில் உள்ள பயனர்கள் இழப்பு

செயலில் உள்ள பயனர்கள் இழப்பு

வோடபோன் ஐடியா நிறுவனம் செயலில் உள்ள 0.47 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது. அக்டோபரில் அதன் VLR அல்லது செயலில் உள்ள பயனர்கள் வீதம் 86.20% ஆக இருந்தது. ஜியோவில் 4.9 மில்லியன் செயலில் உள்ள பயனர்களை சேர்த்துள்ளது. இதே ஏர்டெல் நிறுவனம் 0.96 மில்லியன் பயனர்களை சேர்த்துள்ளது. இதே பி எஸ் என் எல் செயலில் உள்ள 0.62 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது.

செயலற்ற பயனர்கள்

செயலற்ற பயனர்கள்

ஏர்டெல்லுக்கு பல செயலற்ற பயனர்கள் இல்லை. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வி எல் ஆர் சந்தாதாரர் சதவீதம் அக்டோபரில் 98.56% ஆக இருந்தது. இதே ஜியோவில் 91.93% ஆக இருந்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக செயலில் உள்ள பயனர்கள் தேவை. பல ஆண்டுகளாக ஏர்டெல் அதன் பயனர்களை செயலில் உள்ளதை வலுவாகவே உள்ளது. ஜியோவும் அதனை மேற்கொண்டு அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TRAI updates: vodafone idea users loses 3,509,666 in October 2022

Vodafone Idea has seen a decline in the number of telecom customers to 117 crore in October last year. Almost 35 lakh people have left Vodafone Idea
Story first published: Wednesday, December 21, 2022, 11:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X