ஏப்ரல் 1 முதல் ஓடிபி உள்ளிட்ட SMSகள் வராது? 18 வங்கி உட்பட 39 நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், எஸ்எம்எஸ் விதிகளை பின்பற்றாத, 39 முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள், தங்கள் எஸ்எம்எஸ், விதிகளை பின்பற்ற தவறிவிட்டதாக கூறியுள்ளது.

Telecom Communications Customer Preference Regulations, 2018, அடிப்படையில் மொத்தமான எஸ்எம்எஸ்-களை அனுப்பும் நிறுவனங்கள், வங்கிகள் தங்களது தனித்துவமான எஸ்எம்எஸ் ஹெட்டர்ஸ் ஐடி, கன்டென்ட், மற்றும் யூசர் கன்டென்டை தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் உருவாக்கிய பிளாக்செயின் அடிப்படையிலான தளங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகின்றன.

 மோசடிகளை தவிர்க்க முடியும்

மோசடிகளை தவிர்க்க முடியும்

ஆக எந்தவொரு எஸ்எம்எஸ்-களும் இந்த பில்டர்களை தாண்டி செல்வது கடினமே. இதனால் ஹேக்கர்கள் மற்றும் மற்ற சைபர் குற்றவாளிகள் அனுப்பும் எஸ்எம்எஸ்-கள், வாடிக்கையாளர்களுக்கு செல்வது இதன் மூலம் தடுக்கப்படும். மேலும் குறிப்பிட்ட ஹெட்டர் மற்றும் டெம்ப்ளேட்களை பதிவு செய்திருந்தால் பிளாக்செயின் மேடையில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகிய இரண்டுமே அனுப்பிய எஸ்எம்எஸ்கள் எஸ்எம்எஸ் ஸ்கிரப்பிங் என்ற முறையில் அடையாளம் காணப்படலாம்.

 டிராய் எச்சரிக்கை

டிராய் எச்சரிக்கை

ஆக அப்படியான எஸ்எம்எஸ் ஸ்க்ரப்பிங்கை செயல்படுத்துவதில் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கி, டிராய் ஏப்ரல் 1, 2021 முதல் வாடிக்கையாளர்களுடனான தகவல் தொடர்புகளில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க, மார்ச் 31, 2021-க்குள் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 போதுமான வாய்ப்புகள்

போதுமான வாய்ப்புகள்

மேலும் மேற்கண்ட இந்த நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க ஏற்கனவே போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆக ஏப்ரல் 1, 2021 முதல், ஸ்க்ரப்பிங் செயல்பாட்டில் தோல்வியுற்ற எந்த மெசேஜும், நிராகரிக்கப்படும் என்றும் TRAI கூறியுள்ளது. ஆக டிராயின் இந்த விதிமுறையினை இணங்காத நிறுவனங்களின், வங்கிகளின் எஸ் எம் எஸ்கள் ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

 எந்தெந்த வங்கிகள்

எந்தெந்த வங்கிகள்

1. ஆக்ஸிஸ் வங்கி
2. பந்தன் வங்கி
3. பேங்க் ஆப் இந்தியா
4. கனரா வங்கி
5. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
6. ஃபெடரல் வங்கி
7. ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட்
8. ஐசிஐசிஐ வங்கி
9. ஐடிபிஐ வங்கி
10. இந்தியன் ஒவர்சீஸ் வங்கி
11. கோடக் மகேந்திரா வங்கி
12. பஞ்சாப் நேஷனல் வங்கி
13. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
14. ஆர்பிஎல் வங்கி
15. யூனியன் பேங்க் ஆப் இந்தியா
16. யெஸ் வங்கி
17. பேங்க் ஆப் பரோடா
18. ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
19. எஸ்பிஐ கார்ட்ஸ் அன்ட் பேமென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்

நிறுவனங்கள்
என்னென்ன நிறுவனங்கள்

20. ஏ & ஏ டுகான் பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்(A&A Dukaan Financial Services Private Limited)
21. ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட்
22. பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்
23. தக்ஷின் ஹரியானா பிஜ்லி வித்ரான் நிகாம் லிமிடெட்(Dakshin Haryana Bijli Vitran Nigam Limited)
24. டெல்லிவரி பிரைவேட் லிமிடெட் (Delhivery Private Limited)
25. பிளிப்காரட் இண்டர்னெட் பிரைவேட் லிமிடெட்(Flipkart Internet Pvt. Ltd)
26. ஃப்ரீசார்ஜ் பேமென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (Freecharge Payment Technologies Private Limited)
27. இந்தியாபுல்ஸ் கன்சியூமர் ஃபைனான்ஸ் லிமிடெட்
28. இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
29. கோடக் செக்யூரிட்டீஸ் லிமிடெட்
30. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
31. மெட்லைஃப் வெல்னஸ் ரீடைல் பிரைவேட் லிமிடெட்
32. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ்
33. பிஎஸ்ஐ பிஹெச்ஐ குளோபல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (PSI PHI Global Solutions Private Limited)
34. Rajasthan state health society recruitment
35. ரிலையன்ஸ் ரீடெயில் லிமிடெட்
36. சாம்சங் இந்தியா எல்க்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்
37. Supermarket Grocery Supplied Private Limited
38. Tata AIA Life Insurance
39. Vedantu Innovations Private Limited

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trai warned these 39 top banks and companies for not following SMS rules

Trai latest updates.. Trai warned these 39 top banks and companies for not following SMS rules
Story first published: Wednesday, March 31, 2021, 12:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X