கோடீஸ்வரராக டிரான்ஸ்குளோப் ஃபுட் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணிட்டோமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பங்கு சந்தையில் ஒரு வர்த்தகர் என்றால், நிச்சயம் இந்த பெயரை படித்ததுமே தெரிந்து கொண்டு இருக்கலாம்.

டிரான்ஸ்குளோப் ஃபுட் (Transglobe Foods Limited) முதன் முதலாக 11 நவம்பர் 86 அன்று, தனியார் லிமிடெட் நிறுவனமாக இணைக்கப்பட்டது. அதன் பிறகு 25 ஜனவரி 1993ல் public லிமிடெட் ஆக மாற்றப்பட்டது.

சரி இந்த நிறுவனம் என்ன தொழில் செய்து வருகிறது. எதனால் இதன் விலை இவ்வளவு அதிகரித்துள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

டிரான்ஸ்குளோப் ஃபுட் என்ன செய்கிறது?
 

டிரான்ஸ்குளோப் ஃபுட் என்ன செய்கிறது?

டிரான்ஸ்குளோப் ஃபுட் (Transglobe Foods Limited) நிறுவனம் முன்னர் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறி பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டது. ஆனால் தற்போது பல்வேறு உணவு தானியங்களின் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. குஜராத் முழுவதிலும் இதன் பெயரில் பல்வேறு வகையான உணவு பொருட்களை விற்பனை செய்கிறது. குறிப்பாக இந்த பிராண்ட் பெயரில் ப்ரூட் ஜாம், தக்காளி கெட்சப், பேஸ்ட்ஸ், பல வகையான ஊறுகாய்களை விற்பனை செய்கிறது.

பட்டையை கிளப்பிய பங்கு விலை

பட்டையை கிளப்பிய பங்கு விலை

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கானது கடந்த ஒராண்டில், அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு டிரான்ஸ்குளோப் ஃபுட்டின் பங்கு விலை வெறும் 2.80 ரூபாயாக இருந்தது. ஆனால் இதுவே நவம்பர் 14 அன்று இதன் பங்கு விலையானது 228.20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 8,000 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

நல்ல லாபம் கொடுத்துள்ள பங்கு

நல்ல லாபம் கொடுத்துள்ள பங்கு

இந்த இடைப்பட்ட காலத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 8.78% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது கவனிக்கதக்கது. ஆக நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடியைத் தாண்டும். ஒரு பங்கினை நீங்கள் 3 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் கூட, சுமார் 66,600 பங்குகளை வாங்கியிருக்க முடியும். அதன் மதிப்பு நவம்பர் 14 அன்று நிலவரப்படி பார்த்தால் கூட, 1.50 கோடி ரூபாய்க்கு மேல். .

முகூர்த் டிரேடிங்கில் என்ன நிலவரம்?
 

முகூர்த் டிரேடிங்கில் என்ன நிலவரம்?

கடைசியாக இந்த மைக்ரோகேப் பங்கானது முகூர்த் டிரேடிங் அன்று, 2% கீழாக குறைந்து, 228.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் சந்தை மதிப்பும் பிஎஸ்இ-யில் 3.31 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் விலையானது கடந்த 13 நாட்களில் 23 சதவீத இழப்பினையும் கண்டுள்ளது. எனினும் இந்த நிறுவன பங்கின் விலையானது 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.

சமீப காலமாக இழப்பு தான்

சமீப காலமாக இழப்பு தான்

ஆனால் அதே நேரம் 5 நாள் மற்றும் 20 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜிக்கு கீழ் வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது ஒரு மாதத்தில் 4.34% இழப்பினை கண்டுள்ளது. இதே கடந்த வாரத்தில் 11.34% இழப்பினை கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் முறையே 7.42% மற்றும் 4.34% ஏற்றம் கண்டுள்ளது.

விற்பனை பூஜ்ஜியம் தான்

விற்பனை பூஜ்ஜியம் தான்

ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் மார்ச் 2017வுடன் முடிந்த நிதியாண்டில் இருந்து, பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் கடந்த மார்ச் 2020ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் நிகரலாபமாக 0.18 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. இதே மார்ச் 2019ம் நிதியாண்டில் 0.19 கோடி ரூபாயாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நஷ்டம் தான்

நஷ்டம் தான்

எனினும் கடந்த 2018ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 0.25 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது. இதுவே செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 0.05 கோடி ரூபாய் நஷ்டத்தினையும், இது முந்தைய ஆண்டில் 0.04 கோடி ரூபாயாக பதிவு செய்திருந்தது கவனிக்கதக்கது. இந்த நிறுவனம் என் எஸ் இயில் பதிவு செய்யப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Transglobe foods gave an opportunity to become a crorepati

Share price of Transglobe food delivered strong returns to investors in last one year. Transglobe food share price trade at Rs.2.80 an year ago and closed at Rs.228.20 on November 14.
Story first published: Monday, November 16, 2020, 20:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X