தினசரி ரூ.315 கோடி நஷ்டம்.. விரட்டும் கொரோனாவால் பெரும் தொல்லையே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போது நாட்டில் விஸ்வரூபம் எடுத்து ஆட்டம் காட்டி வரும் கொரோனாவால், மக்கள் இன்னும் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்க போகிறார்களோ தெரியவில்லை.

 

ஏனெனில் கொரோனாவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். பல லட்சம் பேர் பாதிகப்பட்டுள்ளனர். கடுமையான கட்டுபாடுகளினால், பொருளாதாரம் வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

இதனால் பலர் அத்தியாவசிய தேவைக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. ஆக முதல் ஆட்டத்திற்கு பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ள நிலையில், தற்போது இரண்டாம் ஆட்டத்திற்கு ரெடியாகிவிட்டது கொரோனா.

ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. !

ஒரு நாளைக்கு சுமார் ரூ315 கோடி நஷ்டம்

ஒரு நாளைக்கு சுமார் ரூ315 கோடி நஷ்டம்

ஆனால் இதுவரையில் மக்கள் தான் மீளவில்லை. தற்போது இரண்டாம் கட்ட பரவலானது மிக வேகமாக பரவி வரும் நிலையில், அது எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனாவினால் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஒரு நாளைக்கு சுமார் 315 கோடி இழப்பினை சந்தித்து வருவதாக, அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் தலைவர் பால் மல்கித் சிங் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் கட்டுபாடுகள்

மாநில அரசுகளின் கட்டுபாடுகள்

அத்தியாவசிய பொருட்கள் தவிர, பல இடங்களில் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் விதிகப்பட்டுள்ள மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் போக்குவரத்து துறையை பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்து துறையானது ஒரு நாளைக்கு 315 கோடி ரூபாய் இழப்பினை எதிர்கொள்கிறது.

தேவை குறைவு
 

தேவை குறைவு

மேலும் தற்போதைய நிலைமை பற்றி பேசிய மல்கித், லாரிகளுக்கான தேவை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் மதிப்பீட்டின் படி, நாடு முழுவதும் 50% குறைந்துள்ளது. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரையில் தற்போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற மருத்துவ பொருட்கள் மற்றும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் என அத்தியாவசிய பொருட்கள் தான் கொண்டு செல்லப்படுகின்றன.

மஹாராஷ்டிராவில் உற்பத்தி அதிகம்

மஹாராஷ்டிராவில் உற்பத்தி அதிகம்

மற்றவை அனைத்தும் மஹாராராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக நிறுத்தப்படுகின்றன. மஹாராராஷ்டிரா மாநிலம் முன்னணி வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். நாட்டின் முக்கிய உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாகும். இந்த பிரச்சனைகளால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மற்றும் மற்ற தொழிலாளர்களின் வாழ்வாதம் பாதிக்கப்படும்.

நெருக்கடியில் மக்கள்

நெருக்கடியில் மக்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் மக்கள் உள்ள நிலையில், அவர்களை இன்னும் நெருக்கடிக்கு முடக்குகின்றன. அவர்கள் வரி, இன்சூரன்ஸ், சம்பளம் மற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளம், மற்ற செலவினங்கள், மாத தவணை தொகை, உள்ளிட்ட நிர்வாக செலவுகளும் உள்ளன. மொத்தத்தில் இந்த கட்டுப்பாடுகள் மேற்கொண்டு பிரச்சனைகளைத் தான் கொண்டு வரும்.

சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

இதனால் போக்குவரத்து துறையை மீட்டெடுக்க அரசு, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், சுங்கவரி மற்றும் சாலை வரிகளை சிறிது காலத்திற்கு விலக்க வேண்டும் என மல்கித் கூறியுள்ளார். அதோடு ஒட்டுனர்களுக்கு மாநில வரி தள்ளுபடி, permit and fitness fees, free parking for idle trucks and buses உள்ளிட்ட சலுகைகளை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதோடு போக்குவரத்து துறையில் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Transport sector facing loss of Rs.315 crore per day due to coronavirus

Coronavirus impact.. Transport sector facing loss of Rs.315 crore per day due to coronavirus
Story first published: Sunday, April 18, 2021, 19:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X