அமெரிக்க நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. 25% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஒரு நல்ல விஷயமும் உண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவினால் உலகமே ஸ்தம்பித்துபோயுள்ள நிலையில், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது வல்லரசான அமெரிக்கா தான். பாதிப்பு எண்ணிக்கையும் சரி, பலி எண்ணிக்கையும் சரி மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகம் தான். அதே நேரம் பொருளாதார ரீதியாகவும் மிக பின்னடைவை சந்தித்து வருகிறது.

 

அந்த நாட்டில் ஏற்கனவே வரலாறு காணாத அளவு வேலையின்மை அதிகரித்து வருவதை, நாம் அன்றாடம் செய்திகள் மூலம் காண முடிகிறது.

உலகின் வல்லரசுக்கே இந்த நிலை என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் அடியை காணலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா நிறுவனங்கள் பெரும் செலவினைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிகரித்து வரும் பணி நீக்கம்

அதிகரித்து வரும் பணி நீக்கம்

இதன் ஒரு பகுதியாக அவர்கள் எடுக்கும் முதல் நடவடிக்கையே பணி நீக்கம் தான். மேலும் பல நிறுவனங்கள் நீண்ட கால விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இதனால் போக்குவரத்து, சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட துறைகள் பெருத்த அடி வாங்கியுள்ளன.

ட்ரிப் அட்வைசர் எடுத்த அதிரடி முடிவு

ட்ரிப் அட்வைசர் எடுத்த அதிரடி முடிவு

இதற்கிடையில் மறுபுறம், ட்ரிப் அட்வைசர் நிறுவனம் தனது 25 சதவீத ஊழியர்களை பணி நீன்ன செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் அதன் மொத்த வருவாயும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஊழியர்களில் கால் பகுதியை நீக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பணி நீக்கம் உறுதி
 

பணி நீக்கம் உறுதி

இது குறித்து கடந்த செவ்வாய்கிழமையன்று அதன் வலைதளத்தில் ஊழியர்களின் பணி நீக்கம் குறித்து அறிவித்துள்ளது. இது சுமார் 900க்கும் மேற்பட்ட ஊழியர்களை பாதிக்கிறது. அவர்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் இந்தியர்கள் இல்லை என்பது தான் நல்ல விஷயமே.

சம்பளமும் குறைப்பு

சம்பளமும் குறைப்பு

இது மட்டும் அல்ல, எஞ்சியிருக்கும் ஊழியர்களுக்கு தற்காலிக சம்பள குறைப்பும் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் காஃபர் கூறியுள்ளார். ட்ரிப் அட்வைசர் சுற்றுலா தலங்களை மதிப்பாய்வு செய்யும் தளமாக அறியப்படுகிறது. ஹோட்டல். விமானங்கள் மற்றும் பயண பதிவுகள் என பலவற்றை முன்பதிவு செய்ய இது உதவும்.

வணிகம் பாதிப்பு

வணிகம் பாதிப்பு

இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் மற்றும் வலைதளத்தின் முன்பதிவுகள் மூலம் உருவாக்கப்படும் கமிஷன்களில் இருந்து வருவாயைப் பெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவினால் எங்களது வணிகம் குறைந்து வருகிறது. ஏனெனில் இது மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளின் பயணத்தினையும், அவர்கள் வீட்டில் தங்குவதற்கும் கட்டாயப்படுத்துகிறது. ஆக ஹோட்டல்கள் 100 சதவீத காலியிடங்கள் உள்ளன. விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் கூட காலியாக உள்ளன. ஆக நிதி ரீதியாக எங்கள் நிறுவனம் மிகக் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trip advisor is cutting 25 percent employees amid travel freeze

Tripadvisor lays off 25% of its workforce amid coronavirus pandemic.
Story first published: Wednesday, April 29, 2020, 10:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X