டிக்டாக்-ஐ விற்றுவிட்டு வெளியேறுங்கள்.. அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே சீன வர்த்தகத்திற்கும், சேவைகளுக்கும் எதிராகப் பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் காட்டுத்தீ போல வேகமாக மக்கள் மத்தியில் பரவி வரும் டிக்டாக் செயலி பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி டிக்டாக்-ன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.

Recommended Video

Chinese companies will be removed from New York Stock Exchange and NASDAQ | Oneindia Tamil
 

சில நாட்களுக்கு முன்பாக டிக்டாக் அமெரிக்காவில் சேவை அளிக்க வேண்டும் என்றால் தனது பங்குகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கூட்டணி வைத்து அமெரிக்காவில் சேவையைத் தொடரலாம் என அறிவித்திருந்தார், இதற்கு 45 நாட்கள் கெடவும் விதித்தார். இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் மைக்ரோசாப்ட் முதல் பேஸ்புக் நிறுவனம் வரையில் அனைத்து நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் வெள்ளிக்கிழமை மாலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு டிக்டாக் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அடியாத்தி! வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட்! எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா?அடியாத்தி! வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட்! எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா?

புதிய உத்தரவு

புதிய உத்தரவு

2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த சீனாவின் Musical.ly செயலியை வாங்கி டிக்டாக் உடன் இணைத்த பின்பு தான் டிக்டாக் சேவை மிகப்பெரிய அளவிலான வர்த்தக உயர்வை அடைந்தது.

இந்த இணைப்பில் பல்வேறு தேசியப் பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாக அமெரிக்கா தற்போது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபரான டிரம்ப் புதிய உத்தரவை விடுத்துள்ளார்.

 

தடை

தடை

அமெரிக்க வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், அமெரிக்க வர்த்தகச் சேவையில் Musical.ly தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் வர்த்தகம் செய்யவும் மற்றும் சேவை வழங்கவும் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும் Musical.ly உடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய பைட் ஆடல் அல்லது பைட் டான்ஸ்-ன் கிளை நிறுவனங்கள் மற்றும் இதர சீன நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

90 நாள்
 

90 நாள்

மேலும் அமெரிக்காவில் டிக்டாக் இயக்க இருக்கும் சொத்துக்கள் மற்றும் அமைப்புகளை 90 நாட்களுக்குள் முழுமையாக விற்பனை செய்யக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் டிக்டாக் அல்லது Musical.ly மூலம் அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிற்குள்ளேயே விற்பனை செய்து விட்டு மொத்தமாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு.

 

ஒப்புதல்

ஒப்புதல்

இதோடு இந்த டிக்டாக் அல்லது Musical.ly சார்ந்த விற்பனை அனைத்தும் அமெரிக்காவின் கருவூல அமைப்பின் துணை அமைப்பான Committee on Foreign Investment in the United States-யிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே விற்பனை செய்ய முடியும்.

பைட்டான்ஸ் நிறுவனம் Musical.ly-ஐ கைப்பற்றிய டீல்-ல் பிரச்சனை உள்ளது என இதுகுறித்து Committee on Foreign Investment in the United States 2019ஆம் ஆண்டு முதல் ஆலோசனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே தற்போது இந்தக் கிளை அமைப்பு டிரம்ப்-ன் முடிவிற்குள் வருகிறது.

 

அமெரிக்கச் சட்டம்

அமெரிக்கச் சட்டம்

அமெரிக்கச் சட்டம் 1988-ன் படி அமெரிக்க அதிபர் பைட்டான்ஸ் - Musical.ly டீல்களைப் போன்றவற்றைத் தடை செய்யலாம். அப்போது Committee on Foreign Investment in the United States தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்து, பாதுகாப்புகளை உறுதி செய்த பின்பு அனுமதி அளிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump's New executive order: ByteDance need to sell TikTok completely in 90 days

Trump's New executive order: ByteDance need to sell TikTok completely in 90 days
Story first published: Saturday, August 15, 2020, 16:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X