எலக்ட்ரிக் பைக் அறிமுகம்.. டிவிஎஸ் ஆட்டம் ஆரம்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ் எலக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கியுள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் பல முறையில் பதிவு செய்தது போல உலக ஆட்டோமொபைல் சந்தையில் எதிர்காலமே எலக்ட்ரிக் வாகனங்கள் தான். எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் பயன்பாட்டில் பல நாடுகள் முன்னோடியாக இருக்கிறது, இதில் குறிப்பாகச் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கியமானவை.ய

 

ஆனால் ஆசியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியின் ஹப் ஆக இருக்கும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய முக்கியத்துவத்தை மிகவும் தாமதமாக உணர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டும் அல்லாமல் அதிக மக்கள் தொகையும், சுற்றுச்சூழல் மிகவும் மோசமான இருக்கும் நிலையில் இந்தியா இதைக் கவனிக்காமல் விட்டது பெரிய தவறாகவே பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

டெஸ்லாவின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் தற்போது அனைத்து முன்னணி கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது முழுக் கவனத்தையும் எலக்ட்ரிக் வாகன மீது திருப்பியுள்ளது. இந்தியாவில் தற்போது இரு சக்கர வாகன தயாரிப்பில் சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டி அனைத்தும் 3 நிறுவனங்கள் மத்தியில் தான்.

டிவிஎஸ்

டிவிஎஸ்

பஜாஜ் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனங்கள் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கிய நிலையில் தற்போது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் களமிறங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் இனி அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளும் அறிமுகமாகி நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி உருவாக உள்ளது.

ஐகியூப்
 

ஐகியூப்

இந்நிலையில் நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐகியூப் எலக்ட்ரிக்-ஐ பெங்களூரில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஐகியூப் ஸ்கூட்டர் 4.4 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு இயங்குகிறது, சுமார் 40கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடியில் எட்டும் அளவிற்குச் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகப்படியாக 78 கிலோமீட்டர் வேகத்தை அடையும்.

ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் சுமார் 75 கிலோமீட்டர் வரையில் இந்த வாகனம் செல்லும்.

விலை

விலை

மேலும் ஐகியூப் ஸ்கூட்டர் பார்க்கிங் அசிஸ்டன்ஸ், ஸ்மார்ட் ரைட், ஜியோ பென்சிங் எனப் பல தொழில்நுட்ப அமசங்கள் நிறைந்திருக்கும் இது சுமார் 1.15 லட்சம் ரூபாய் விலையில் சந்தைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TVS Motor drives into e-scooter market with the iQube Electric

Two-wheeler manufacturer TVS Motor unveiled its electric scooter iQube Electric in Bengaluru on Saturday, another big-ticket entry into a growing market occupied by Bajaj, Hero Electric and a clutch of new firms heralding the electric transition. TVS has announced that the iQube, indigenously designed and built, has been priced at Rs 1.15 lakh on road.
Story first published: Monday, January 27, 2020, 11:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X