இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் செயல்படுகிறது. இந்தியாவில் தற்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் நாட்டில் வாகன விற்பனை அதிகளவில் குறைந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், டிவிஎஸ் தற்போது வர்த்தக வளர்ச்சிக்காக இந்தியச் சந்தையை விடுத்து தனது வெளிநாட்டு வர்த்தகச் சந்தையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் படி தற்போது டிவிஎஸ் நிறுவனம் தற்போது தனது வர்த்தகத்தை மத்திய அமெரிக்கப் பகுதியில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த ஒரு வருடத்தில் மட்டும் 3 புதிய விற்பனை கிளைகளை Honduras பகுதியில் திறக்க திட்டமிட்டுள்ளது. இக்கிளைகளை டிவிஎஸ் தனது ஆஸ்தான Motomundo SA நிறுவனத்துடன் இணைந்து புதிய கிளை திறக்க முடிவு செய்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தில் இருக்கும் சுமார் 40 விற்பனை கிளைகளை Motomundo SA நிறுவன கூட்டணியில் நடத்தி நிர்வாகம் செய்து வருகிறது. இக்கூட்டணி மூலம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை மாற்றித் தருவது மட்டும் அல்லாமல் முழுமையான சர்வீசஸ் மற்றும் உதிரி பாகங்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.
இக்கூட்டணியின் மூலம் டிவிஎஸ் நிறுவனத்தின் மத்திய அமெரிக்க வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டியுள்ளது.
டிவிஎஸ் தற்போது மத்திய அமெரிக்கச் சந்தையில் சுமார் 6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்கிறது. அதில் அப்பாச்சி RR 310, அப்பாச்சி RTR 160 4V, அப்பாச்சி RTR 160 2V ரேஸ் ரகம், அப்பாச்சி RTR 180 ரேஸ் ரகம், அப்பாச்சி RTR 200 4V ரேஸ் ரகம் 2.0. மற்றும் என்டிராக் 125 ஸ்க்கூட்டர்.
டிவிஎஸ் நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி ஏப்ரல் - ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 5,73,000 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் 14 சதவீதம் அதிகமாகும். இதேபோல் மூன்று சக்கர வாகன ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்து 1,35,000 ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications