எலான் மஸ்க்-ன் மிரட்டலான ஈமெயில்.. தெறித்து ஓடிய 1200 ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் சுத்தி சுத்தி அடிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார், ஒருபக்கம் டெஸ்லாவில் அவருடைய 56 பில்லியன் டாலர் சம்பளம் குறித்த வழக்கு பெரும் பிரச்சனையாக மாறியிருக்கும் இதே வேளையில் டிவிட்டர் நிறுவனத்தைத் தனது வழிக்குக் கொண்டு வர எலான் மஸ்க் அனுப்பிய ஒரு ஈமெயில் மூலம் தற்போது கொத்துக் கொத்தாக ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

 

இதனால் டிவிட்டர் நிறுவனம் இனியும் தாக்கு பிடிக்குமா என்ற கேள்வி எழும் அளவிற்கு நிலை மாறியுள்ளது. ஆனால் எலான் மஸ்க் இதை முன்பே கணித்துத் தான் கடுமையான ஈமெயிலை அனுப்பியுள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை விட்டு சுமார் 1200 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்த நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து சுமார் 3700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட, கடந்த வாரம் டிவிட்டர் தனது ஒப்பந்த ஊழியர்கள் பிரிவில் சுமார் 4400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 extremely hardcore ஈமெயில்

extremely hardcore ஈமெயில்

இந்த முக்கியமான நேரத்தில் எலான் மஸ்க் அனுப்பிய extremely hardcore ஈமெயில் மூலம் சுமார் 1200 ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இந்த முறை வெளியேறியுள்ள ஊழியர்கள் அனைவரும் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளதாகத் தெரிகிறது.

1200 ஊழியர்கள்
 

1200 ஊழியர்கள்

இந்த 1200 ஊழியர்களில் நிறுவனத்தின் முக்கியத் தொழில்நுட்ப கட்டமைப்பு அணிகளில் இருந்து அதிகமானவர்கள் வெளியேறியுள்ள காரணத்தால், எலான் மஸ்க் வெளியேறும் ஊழியர்களிடம் தாங்கள் பணியாற்றிய தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்டு உள்ளார்.

முக்கியப் பிரச்சனை

முக்கியப் பிரச்சனை


இதேபோல் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்த சில ஊழியர்களைக் கடந்த 6 மாதத்தில் நீங்கள் எழுதிய முக்கியமான கோடு என்ன என்றும் 10 ஸ்கிரீன் ஷாட் அனுப்பும்படியும் கேட்டு உள்ளார். எலான் மஸ்க் ஏற்கனவே 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தக்க வைக்கப்பட்டு உள்ள முக்கியமான ஊழியர்களில் இருந்து 1200 ஊழியர்கள் வெளியேறுவதால் பெரும் பிரச்சனையில் டிவிட்டர் மாடிக்கொண்டு உள்ளது.

 44 பில்லியன் டாலர்

44 பில்லியன் டாலர்

எலான் மஸ்க் டிவிட்டரை வைத்துப் பல முக்கியமான திட்டங்களைத் திட்டமிட்டு இருப்பது மட்டும் அல்லாமல் உலக மக்களுக்கு இதுவரையில் யாரும் பார்த்திடாத வகையிலான சமூகவலைத்தளத்தை மக்களுக்கு அளிக்கத் திட்டமிட்டு 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை வாங்கினார்.

டிவிட்டர் ஊழியர்கள்

டிவிட்டர் ஊழியர்கள்

ஆனால் டிவிட்டர் ஊழியர்களுக்குத் தனது திட்டத்தின் முக்கியத்துவத்தை உணராமலும், எலான் மஸ்க் நிர்வாகம் கொடுக்கும் பணிகளை உரிய நேரத்தில் முடிக்காமலும் தொடர்ந்து மெத்தனமாக உள்ளனர். இதனால் எலான் மஸ்க் திட்டங்கள், கனவுகள் அனைத்தும் தொய்வு அடைந்து வருகிறது.

பொறுமை இழந்த எலான் மஸ்க்

பொறுமை இழந்த எலான் மஸ்க்

இந்த நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி பொறுமை இழந்த எலான் மஸ்க் அனைத்து டிவிட்டர் ஊழியர்களுக்கும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், டிவிட்டரின் புதிய hardcore ஆக நீங்க இருக்க வேண்டுமா அல்லது 3 மாதம் severance pay உடன் இப்போத வெளியேறலாம் என ஈமெயில் அனுப்பியுள்ளார்.

 ஓரே ஒரு இணைப்பு

ஓரே ஒரு இணைப்பு

என்னுடைய தலைமையின் கீழ் டிவிட்டர் நிறுவனத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் கீழே உள்ள இணைப்பை வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் கிளிக் செய்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். கிளிக் செய்யாதவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகக் கருதப்படும் என இந்த ஈமெயிலில் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் 2.0 திட்டம்

டிவிட்டர் 2.0 திட்டம்

எலான் மஸ்க் டிவிட்டர் 2.0 உருவாக்கப்போவதாகவும், இந்தப் பாதையில் இருக்கும் ஊழியர்கள் extremely hardcore ஆக இருப்பார்கள், இந்தப் பயணத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும், கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதையும் தனது ஈமெயிலில் விளக்கினர்.

 டிவிட்டர் ஊழியர்கள்

டிவிட்டர் ஊழியர்கள்

இந்த ஈமெயில் வெளியானதற்குப் பின்பு டிவிட்டர் ஊழியர்கள் இணைப்பைக் கூடத் திறக்காமல் எலான் மஸ்க், ஹெச்ஆர், டீம் மேனேஜர்களுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு பணியை 3 மாத severance pay உடன் ராஜினாமா செய்தனர். இதனால் வெள்ளிக்கிழமை டிவிட்டர் நிறுவனத்தின் ஸ்லாக் கணக்குகள் ஊழியர்கள் வெளியேற்ற அறிவிப்பால் நிரம்பி வழிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter: Another 1200 employees quit after Elon Musk's ultimatum email

Twitter: Another 1200 employees quit after Elon Musk's ultimatum email
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X