உலகின் முன்னணி சமுக வலைத்தளமாக விளங்கும் ட்விட்டர் இது நாள் வரையில் இலவசமாக அளித்து வந்த ப்ளூ வெரிபிகேஷன்-ஐ தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாற்றியது மட்டும் அல்லாமல் இதன் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என முடிவு செய்தது எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம்.
இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் நிர்வாகம் முதலில் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன்-க்கு மாதம் 8 டாலர் கட்டணம் என அறிவித்த நிலையில், தற்போது 11 டாலராகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் ட்விட்டர் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்விட்டரின் இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் ஓரே கட்டணத்தை அறிவித்துள்ளது.
முதலில் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்குத் தான் மாதம் 11 டாலர் என்ற கட்டணத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து பல மாற்றங்களை இத்தளம் எதிர்கொண்டு வருகிறது, இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் அதாவது ப்ளூ டிக் வெரிபிகேஷன்-ஐ மாதம் 11 டாலர் விலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்க உள்ளது ட்விட்டர்.
வெப் யூசர்
மேலும் வெப் யூசர்களுக்கு வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை 84 டாலர் என்ற மலிவான விலையில் கொடுக்கத் தயாராகியுள்ளது எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிர்வாகம்.
முக்கிய நாடுகள்
84 டாலர் என்றால் மாதம் 8 டாலராகும். இந்தத் தள்ளுபடி விலை திட்டம் முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெப் யூசர்களுக்குக் கிடைக்கும் என்று ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவசம்
இந்த ப்ளூ டிக் வெரிபிகேஷன் பேட்ச்-ஐ முன்பு இலவசமாக அரசியல்வாதிகள், செலிப்ரிட்டிகளுக்கு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிற பிரபலமானவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 11 டாலர் மாத கட்டணத்துடன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அளிக்கப்படுகிறது.
அங்கீகாரம்
இது சமூகவலைத்தளத்தில் மக்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த ஆண்டு இத்தளத்தின் விளம்பரதாரர்களிடம் போட்டிப்போட்டு வந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில கோளாறு காரணமாக இத்திட்டம் திரும்பப்பெறப்பட்டது.
முயற்சி தோல்வி
2022 அக்டோபர் மாதம் அனைவருக்கும் 8 டாலர் மாத கட்டணத்தில் ப்ளூ டிக் வெரிபிகேஷன் சேவையை அளிக்கப்பட்ட போது பல போலிக் கணக்குகள் நிறுவனங்கள் பெயருடன் உருவாக்கப்பட்டு இலவசம், ஆஃபர் போன்ற பல்வேறு டிவீட்களைச் செய்து பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அடுத்த சில நாட்களில் இந்த அனைவருக்கும் 8 டாலர் மாத கட்டணத்தில் ப்ளூ டிக் வெரிபிகேஷன் திட்டத்தைத் திரும்பப் பெறப்பட்டது.
புதிய வெரிபிகேஷன் முறை
அக்டோபர் மாத தோல்விக்குப் பின்பு எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் இப்புதிய வெரிபிகேஷன் முறையைக் கட்டமைத்தது. இதில் பொதுவான நீல நிற அடையாளத்தை நீக்கிவிட்டு, நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு வெவ்வேறு வண்ண வெரிபிகேஷ் டிக் பேட்ச்-களை வழங்க முடிவு செய்தது.
3 நிறம்
அதாவது நிறுவனங்களுக்குத் தங்க நிறத்தில் பேட்ச்-ம், அரசாங்கத்தைச் சார்ந்த அமைப்புகளின் கணக்கிற்குச் சாம்பல் நிற பேட்ச்-ம், தனிநபர்களுக்கு நீல நிற பேட்ச்-ம் வழங்கப்படுகிறது. முன்பு செலிப்ரிட்டி-களுக்குத் தனியாக ஒரு பேட்ச் அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியானது.
தற்போது நிறுவனங்களுக்கான தங்க நிறத்தில் பேட்ச் வெரிபிகேஷன் முறை துவங்கியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications