கொரோனாவுக்காக ரூ.7,500 கோடி மதிப்பிலான பங்குகளை கொடுத்த ட்விட்டர் CEO! வாழ்த்துக்கள் ஜாக் டார்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடக்குனா அடங்குற ஆளா நீ... என்கிற வாசகம் கொரோனாவுக்கு நறுக்கெனப் பொருந்தும்.

உலக நாடுகள் எல்லாம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவே இந்தியாவிடம் இருந்து தான் மருந்துகளை வாங்கி சமாளிக்க வேண்டி இருக்கிறது என்றால் உலகம் எந்த அளவுக்கு சிக்களில் தவித்துக் கொண்டு இருக்கிறது என்பது புரியும்.

நன்கொடை
 

நன்கொடை

இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் பல நிறுவனங்கள் மற்றும் நிறுவன முதலாளிகள், தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். டாடா, விப்ரோ, ரிலையன்ஸ், மஹிந்திரா என பல இந்திய கம்பெனிகளும், இந்திய கார்ப்பரேட் ஆளுமைகளும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜாக் டார்சி

ஜாக் டார்சி

இந்த கார்ப்பரேட் தலைவர்கள் பட்டியலில், ட்விட்டர் நிறுவ��த்தின் முதன்மைச் செயல் அதிகாரியான ஜாக் டார்சியும் இணைந்து இருக்கிறார். தன்னால் முடிந்த உதவியாக, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, தன் ஸ்கொயர் நிறுவன பங்குகளை அள்ளிக் கொடுத்து இருக்கிறார். இது இந்திய மதிப்பில் சுமார் 7,500 கோடி ரூபாய்.

28 % சொத்து

28 % சொத்து

இது தன்னுடைய மொத்த சொத்தில் 28 சதவிகிதம் என்பதையும் தன் டிவிட்டர் பதிவிலேயே சொல்லி இருக்கிறார் ட்விட்டர் முதன்மைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி. ஜாக் டார்ஸி ட்விட்டர் மட்டும் இன்றி, ஸ்கொயர் (Square) என்கிற நிறுவனத்துக்கும் சி இ ஓ-ஆக இருக்கிறார்.

ஸ்கொயர் பங்குகள்
 

ஸ்கொயர் பங்குகள்

இப்போது 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான 1,98,33,400 ஸ்கொயர் ஈக்விட்டி பங்குகளைத் தான் ஸ்டார்ட் ஸ்மால் என்கிற எல் எல் சி கம்பெனியிடம் கொடுத்து இருக்கிறார். இந்த பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தை தான் இப்போது கொரோனா வைரஸ் நிவாரணத்துக்கு பயன்படுத்த இருக்கிறார்களாம்.

மற்ற வேலைகள்

மற்ற வேலைகள்

கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பின், பெண்கள் சுகாதாரம், பெண்கள் கல்வி போன்ற சேவைகளுக்கு செலவழிக்கத் தொடங்குவார்களாம். இந்த மொத்த செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்கும். அதை கீழே கூகுள் ஷீட்ஸ்-ல் பார்க்கலாம் என, தன் ட்விட்டர் பக்கத்திலேயே லிங்கைக் கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள் ஜாக். ஜாக் டார்ஸியின் ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter CEO Jack Dorsey pledge Rs 7500 crore worth share for Corona relief

Twitter Chief Executive office jack Dorsey pledges around Rs 7,500 worth of square company equity shares for coronavirus relief.
Story first published: Wednesday, April 8, 2020, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X