பராக் அகர்வால் அதிரடி.. 2 உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருந்த ஜாக் டோர்சி இப்பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், புதிய சிஇஓ-வாகப் பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனத்தின் போதே பல சர்ச்சைகள் வெடித்த நிலையில், சில நாட்களில் டிவிட்டர் அமைதியாய் இயங்க துவங்கியது.

இந்நிலையில் பராக் அகர்வால் திடீரென டிவிட்டர் நிறுவனத்தின் இரு முக்கிய உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளதை மறைமுகமாகத் தனது நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது, டெக் உலகில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா எண்ணெய் விலை.. ! அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா எண்ணெய் விலை.. !

டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்ப அதிகாரி மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நிறுவன பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பராக் அகர்வால் தலைமையிலான டிவிட்டர் நிர்வாகத்தின் முதல் மற்றும் அதிரடியான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

உயர் அதிகாரிகள் வெளியேற்றம்

உயர் அதிகாரிகள் வெளியேற்றம்

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி டிவிட்டர் நிறுவனத்தின் சீஃப் செக்யூரிட்டி ஆபீசரான பீட்டர் ஜாட்கோ உடனடியாகத் தனது பணியை விட்டு விலகியுள்ளதாகவும், அடுத்தச் சில வாரத்தில் இந்நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான ரின்கி சேத்தி வெளியேற உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

இந்த இரு உயர் அதிகாரிகளின் வெளியேற்றத்தைக் குறித்து டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோ-வில் தற்போது நிறுவனம் எவ்வாறு வழிநடத்தப்படுகிறது மற்றும் முதன்மையான வேலையின் தாக்கம் பற்றிய மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் உயர் மட்ட நிர்வாகத்தில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதைப் பற்றித் தற்போது முழுமையாகக் கூற முடியாது என

பீட்டர் ஜாட்கோ

பீட்டர் ஜாட்கோ

2020ல் டிவிட்டர் நிறுவனத்தின் இன்ஜினியரிங் தவறுகள் முதல் தவறான கட்டமைப்புகள் வரையில் அனைத்தையும் சரி செய்ய உலகின் மிகவும் புகழ்பெற்ற ஹேக்கர்களில் ஒருவரான பீட்டர் ஜாட்கோ நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் பென்டகன்

அமெரிக்காவின் பென்டகன்

இதற்கு முன்பு பீட்டர் ஜாட்கோ பேமெண்ட் நிறுவனமான Stripe நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவிலும், கூகுள் சிறப்புத் திட்டங்களிலும், அமெரிக்காவின் பென்டகன் DARPA திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.

 ரின்கி சேத்தி

ரின்கி சேத்தி

பீட்டர் ஜாட்கோ நியமனத்தைத் தொடர்ந்து தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பதவியில் ரின்கி சேத்தி நியமிக்கப்பட்டார். இவர் டிவிட்டர் நிறுவனத்தின் செக்யூரிட்டி மட்டும் அல்லாமல் டிவிட்டர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தரவுகள் பாதுகாக்கும் முக்கியமான பணியில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter CEO Parag Agrawal sacks two top executives

Twitter CEO Parag Agrawal sacks two top executives பராக் அகர்வால் அதிரடி.. 2 உயர் அதிகாரிகளை டிஸ்மிஸ்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X