மறுபடியும் முதல்ல இருந்தா.. ட்விட்டரின் அடுத்த முடிவு.. எலான் மஸ்க் திட்டம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ட்விட்டர் நிறுவனத்தினை கையகப்படுத்திய எலான் மஸ்க், அதில் பணி நீக்கம் தொடங்கி பல்வேறு அதிரடியான நடவடிக்கையினை எடுத்து வருகின்றார். ஒரு வழியாக தற்போது தான் பணி நீக்கம் குறைந்து சீரடையத் தொடங்கியது என எண்ணிய ஊழியர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்க தொடங்கியுள்ளார் எலான் மஸ்க். ஊழியர்களின் சந்தோஷமானது வெகு நாள் நீடிக்கவில்லை எனலாம்.

தற்போது மீண்டும் ட்விட்டரில் பணி நீக்கம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் அதன் உள்கட்டமைப்பு பிரிவில் உள்ள தேவையில்லாத இன்ஜினியர்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அது வெளியான சில தினங்களுக்கு பிறகு, தற்போது அதன் பொதுக் கொள்கை குழுவில் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதோ வந்தாச்சுல்ல... எலான் மஸ்க் புதிய அறிவிப்பால் கடுப்பான ட்விட்டர் ஊழியர்கள்.. ! இதோ வந்தாச்சுல்ல... எலான் மஸ்க் புதிய அறிவிப்பால் கடுப்பான ட்விட்டர் ஊழியர்கள்.. !

எப்போது வேலை பறிபோகுமோ?

எப்போது வேலை பறிபோகுமோ?

சொல்லப்போனால் எந்த நேரத்தில் தங்கள் வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். இன்னும் பணி நீக்கம் தொடருமா என்ற அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மெயில் ஒன்று கிடைத்ததாகவும், அதில் இனி உங்கள் பங்கு நிறுவனத்திற்கு தேவைப்படாது என்று கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

பொது கொள்கை குழுவில் பணி நீக்கம்

பொது கொள்கை குழுவில் பணி நீக்கம்

இது குறித்து ஒரு ஊழியர் ஒருவர் நேற்று எனது கடைசி நாள். நான் எனது குழுவில் இருந்து விலக்கப்பட்டேன். பொதுக் கொள்கை குழுவில் ஏற்கனவே பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது மீதம் இருப்பவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டோம். இனியும் இருப்பவர்களின் நிலை என்னவாகுமோ என்ற அச்சமே இருந்து வருகிறது.

பெருமை கொள்கிறோம்
 

பெருமை கொள்கிறோம்

ஈரான், உக்ரைன், லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், நாங்கள் மக்களை பாதுகாக்க நாங்கள் செய்த பணியை பற்றி நினைத்து, நான் பெருமைபடுகிறேன். கடந்த வாரம் பணி நீக்கம் செய்யும் வரை, எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலை நிர்வகித்தல் எனது பணி குறித்து நான் பெருமைபடுகிறேன் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

முட்டாளை தேடிபிடித்து விட்டு ராஜினாமா?

முட்டாளை தேடிபிடித்து விட்டு ராஜினாமா?

சில தினங்களுக்கு நடத்திய சர்வேயில் எலான் மஸ்கிற்கு எதிராக முடிவுகள் வரவே, விரைவில் நான் ட்விட்டரில் இருந்து விலகுவேன், அதற்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு, அதன் பிறகு தான் ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். அதன் பின்னர் மென்பொருள் சர்வர் அணிகளை ஏற்று நடத்துவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

2 மாதங்களாக நடவடிக்கை

2 மாதங்களாக நடவடிக்கை

ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து 2 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். ஆரம்பத்தில் ட்விட்டர் கையகப்படுத்தியதில் இருந்து தினசரி தனது 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். ஆரம்பத்தில் 50% ஊழியர்களை கூறப்பட்டதை அடுத்து, அடுத்தடுத்து தொடர்ந்து பணி நீக்கத்தினை எடுத்து வருகின்றது.

சர்ச்சை மெயில்

சர்ச்சை மெயில்

அதோடு ஒரு கட்டத்தில் ஊழியர்கள் கூடுதலாக அலுவலகத்தில் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் நீங்கள் உடனே வெளியேறிக் கொள்ளலாம் என்ற சர்ச்சையான மெயிலை அனுப்பினார். இதன் காரணமாக தாங்களாகவே பல ஊழியர்கள் முன் வந்து பணி நீக்கம் செய்தனர். ஒரு கட்டத்தில் பணி நீக்கம் செய்த ஊழியர்கள் சிலறை, தெரியாமல் பணி நீக்கம் செய்து விட்டோம் என திரும்ப அழைத்தது.

ப்ளூடிக் கட்டணம்

ப்ளூடிக் கட்டணம்

இது மட்டும் அல்ல ப்ளூ டிக் கட்டணம் என பற்பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதற்கிடையில் எலான் மஸ்க் இந்தியாவிலும் முக்கால்வாசிக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ட்விட்டரில் மட்டும் அல்ல, டெஸ்லா நிறுவனத்திலும் மீண்டும் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நிலவி வரும் மந்த நிலையின் தாக்கம் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter elon musk continue to lay off employees from public policy team

Elon Musk, who has acquired the Twitter company, is taking various drastic measures starting with the layoffs. Currently, there are reports that the layoffs have started again in Twitter.
Story first published: Friday, December 23, 2022, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X