ஆட்டம் இன்னும் முடியலை.. கதறும் ட்விட்டர் ஊழியர்கள்.. எலான் மஸ்கின் அடுத்த மூவ்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம் இன்னும் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணி நீக்க நடவடிக்கையானது திங்கட்கிழமையன்று தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டரின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் விற்பனை உள்ளிட்ட சில துறைகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அலுவலகம் மூடல்

அலுவலகம் மூடல்

தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க், கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் பணி நீக்கத்தோடு, பல ஊழியர்களும் தாங்களாகவே முன் வந்து தங்களது வேலையினை ராஜினாமா செய்து வருகின்றனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது. ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆக்சஸ் கார்டுகள் எல்லாம் முடக்கப்பட்டன.

விருப்பம் இருந்தால் இருக்கலாம்

விருப்பம் இருந்தால் இருக்கலாம்

மூடப்பட்ட ட்விட்டரின் அலுவலகங்கள் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் எலான் மஸ்க் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்தில் கூடுதல் நேரம் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருக்க விருப்பமில்லாவிட்டால் வெளியேறிக் கொள்ளலாம் என எச்சரித்தார்.

 இனி நிம்மதியா வேலை பார்க்கலாம்

இனி நிம்மதியா வேலை பார்க்கலாம்

கடந்த வாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை தேடுவதாகவும், தனது தலைமை அதிகாரியாக இருக்க விருப்பமில்லை என்றும் அறிவித்திருந்தார். இதனால் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டது. இனி இருக்கும் ஊழியர்கள் நிம்மதியாக வேலை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் பணி நீக்கமா?

மீண்டும் பணி நீக்கமா?

ஆனால் அந்த நிம்மதி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. ஏனெனில் எதற்காக அலுவலகங்கள் மூடப்பட்டன. தற்போது விற்பனை பிரிவு உட்பட சில துறைகளில் மீண்டும் பணி நீக்கம் இனியும் தொடரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மேற்கோண்டு ஊழியர்கள் மத்தியில் இன்னும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பதற்றமான நிலை

பதற்றமான நிலை

எனினும் ட்விட்டர் நிறுவனம் இது குறித்த எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. எது எப்படியோ திங்கட்கிழமை ட்விட்டர் அலுவலகம் திறக்கப்படும் நிலையில், இன்னும் பற்பல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டுள்ளன எனலாம். ஒவ்வொரு நிமிடமும் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் என்ன நடக்குமோ என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது எனலாம்

திரும்ப அழைக்கப்படும் ஊழியர்கள்

திரும்ப அழைக்கப்படும் ஊழியர்கள்

ட்விட்டரில் நிலவி வரும் இத்தகைய பதற்றமான நிலைக்கு மத்தியிலும் பல ஊழியர்களை திரும்ப நிறுவனத்திற்கு வரக்கூறி, ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ட்விட்டர் நிறுவனம் தற்போது பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள விற்பனை பிரிவின் தலைமை அதிகாரியினை திரும்ப அழைப்பு விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்ரம்ப் மீண்டும் ரீ எண்ட்ரி

ட்ரம்ப் மீண்டும் ரீ எண்ட்ரி

ஒரு புறம் இப்படி எனில், மறுபுறம் டொனால்டு ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கலாம் என்ற வாக்கெடுப்பும் நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் ட்ரம்புக்கு ஆதரவாக பதில்கள் வந்துள்ள நிலையில், ட்ரம்ப் விரைவில் ட்விட்டரில் இணைக்கப்படலாம் என அறிவித்துள்ளார். சமீப்பத்தில் ட்விட்டரின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் பொய்களை பரப்பும் ஒரு தளம் என குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter: Elon musk may lay off further in sales team

Again, Twitter reported that layoffs could be in some departments, including sales
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X